இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவா் ஏ.ஆா். ரஹ்மான்.
படங்களுக்கு இசையமைப்பதோடு மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
அந்தவகையில் மும்பையில் நேற்று இரவு ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார்.

முழு எனர்ஜியோடு ஏ.ஆர்.ரஹ்மான் பாடியதைக் கேட்டு ரசிகர்கள் வைப் ஆகி இருக்கின்றனர். கூடுதல் சிறப்பாக இந்த இசை நிகழ்ச்சியில் நடிகர் தனுஷும் கலந்துகொண்டிருக்கிறார்.