Nadigar Sangam: ``கடன் சுமையாக மாறாமல், இந்த கட்டிடமே அந்தப் பணத்தை ஈட்டித் தரும்!" - நாசர்| Nadigar Sangam Building Will Earn Back the Money Itself - Naasar

Nadigar Sangam: “கடன் சுமையாக மாறாமல், இந்த கட்டிடமே அந்தப் பணத்தை ஈட்டித் தரும்!” – நாசர்| Nadigar Sangam Building Will Earn Back the Money Itself – Naasar


நடிகர் கார்த்தியிடம் செய்தியாளர் ஒருவர், “கட்டடத்திற்காக வாங்கியிருக்கும் கடனை எப்போது அடைக்க வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் தந்த கார்த்தி, “வங்கி 10 வருடம் வரை கால அவகாசம் தந்திருக்கிறது.

இப்போதே எங்களுக்கு சங்கத்திலிருந்து வருமானம் வரத் தொடங்கிவிட்டது. அடுத்தடுத்து கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் திட்டமிட்டிருக்கிறோம்.

இனி அனைத்து ஆடியோ நிகழ்வுகளும் நடிகர் சங்கத்தில்தான் நடைபெறும் என விஷால் உறுதியளித்திருக்கிறார். இப்படி வருமானங்களே அந்தக் கடனை அடைப்பதற்கு வழியை அமைத்துக்கொடுக்கும்.” என்றதும் நடிகர் நாசர், “அடுத்த நிர்வாகத்திற்கு இந்த கடன் சுமையாக மாறாமல், இந்த கட்டடமே அந்தப் பணத்தை ஈட்டித் தரும்.” என்றார்.

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

இதனைத் தொடர்ந்து நடிகர் விஷால், “தடை அத்தனைக்கும் ஒரு காரணம் இருக்கும். அந்த தடைகளைத் தாண்டி வெற்றியை நோக்கி செல்வதுதான் உண்மையான வெற்றி.

எங்களுடைய மனம் சுத்தமாக இருக்கிறது. நாங்கள் தடையைத் தாண்டி வருகிறோம். கட்டடத்திற்கு 7 வருடம் எனச் சொல்கிறார்கள்.

அதற்குள் சென்றால் நீங்கள் வாயைப் பிளந்து பார்ப்பீர்கள். தமிழ்நாட்டின் அடையாளமாகவும் அது இருக்கும்.” என்றார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *