National Awards: ``மோகன் லால் சாருக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சி!" - ஊர்வசி | ``I'm extremely happy that Mohan Lal has received the Dadasaheb Phalke Award!" - Urvashi

National Awards: “மோகன் லால் சாருக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சி!” – ஊர்வசி | “I’m extremely happy that Mohan Lal has received the Dadasaheb Phalke Award!” – Urvashi


71-வது தேசிய விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.

தாதா சாகேப் விருது பெறும் மோகன் லால், தேசிய விருது பெறும் ஷாருக் கான், ஜி.வி.பிரகாஷ், ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், `பார்க்கிங்” பட இயக்குநர் ராம் குமார் என விருது அறிவிக்கப்பட்ட அனைவரும் இந்த நிகழ்வில் பெரு மகிழ்ச்சியோடு கலந்துகொண்டு விருது பெற்றனர்.

விருது பெற்றப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து ஜி.வி. பிரகாஷும், நடிகை ஊர்வசியும் பேசியிருக்கிறார்கள்.

Shah Rukh Khan At 71st National Awards

Shah Rukh Khan At 71st National Awards

ஊர்வசி பேசும்போது, “ரொம்பவே சந்தோஷமான தருணமிது. இரண்டாவது முறையாக தேசிய விருது எனக்கு கிடைத்திருக்கு.

அப்போது எனக்கு விருது வழங்கிய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கும், இப்போது விருது வழங்கிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும் என் நன்றிகள்.

இரண்டு பெண்களிடமிருந்து விருது வாங்கியிருப்பதைப் பெருமையாக நினைக்கிறேன். மோகன் லால் சாருக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சி.” என்றார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *