Nesippaya: "கப்பு முக்கியம்டா தம்பி..." - ஹீரோவாக அறிமுகமாகும் ஆகாஷிற்கு அண்ணன் அதர்வா வாழ்த்து | Atharvaa wishes his brother akash at nesippaya audio launch

Nesippaya: “கப்பு முக்கியம்டா தம்பி…” – ஹீரோவாக அறிமுகமாகும் ஆகாஷிற்கு அண்ணன் அதர்வா வாழ்த்து | Atharvaa wishes his brother akash at nesippaya audio launch


விஷ்ணுவர்தன் இயக்கத்தில், நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேசிப்பாயா’. மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோதான் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 3) சென்னையில் நடைபெற்றது.

நேசிப்பாயா

நேசிப்பாயா

அதில் பேசிய அதர்வா, “என்னுடைய தம்பி ஆகாஷ் நேசிப்பாயா படத்தின் மூலம் அறிமுகமாகிறார். அதிதிக்கும் இந்தப் படம் முக்கியமான ஒரு படமாக இருக்கும். என்னுடைய முதல் படத்திற்கு நடந்த ஒரு நல்ல விஷயம் என் தம்பிக்கும் நடந்திருக்கிறது. அது என்னவென்றால் யுவன் சாரின் இசைதான். இந்த விழாவிற்கு வந்த சிவகார்த்திகேயன் அவர்களுக்கு என்னுடைய குடும்பத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *