Operation Sindoor: வியாபாரமாகிறதா தேசபக்தி? தலைப்புக்குத் தயாரிப்பாளர்களிடையே போட்டி; நிலவரம் என்ன?

Operation Sindoor: வியாபாரமாகிறதா தேசபக்தி? தலைப்புக்குத் தயாரிப்பாளர்களிடையே போட்டி; நிலவரம் என்ன?


பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இந்த வாசகம் இந்தியா முழுவதும் தேசபக்திக்கான அடையாளமாக மாறியிருக்கிறது.

அதனால் ஆப்ரேஷன் சிந்தூர் எனும் வார்த்தையை வியாபாரமாக்கத் தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வர்த்தக முத்திரை சட்டத்தின் பிரிவு 11, முதலில் பயன்படுத்துபவருக்கு அல்லது பதிவு செய்வதற்கு முதலில் தாக்கல் செய்பவருக்கு வர்த்தக முத்திரை (Trade mark) வழங்கப்படும் என்றும் கூறுகிறது.

அதன் அடிப்படையில் பலரும் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற வார்த்தையைப் பதிவு செய்யப் போட்டி நிலவி வருகிறது.

ஆப்ரேஷன் சிந்தூர் திரைப்பட போஸ்டர்
ஆப்ரேஷன் சிந்தூர் திரைப்பட போஸ்டர்

தயாரிப்பாளர்களிடம் போட்டி:

திரைத்துறையில் பலரும் இந்தப் பெயரில் திரைப்படம், வெப் சீரிஸ் போன்றவைகளுக்காகப் பதிவு செய்யத் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் (IMPPA) மற்றும் இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கவுன்சில் (IFTPC) உள்ளிட்ட முக்கிய தொழில்துறை அமைப்புகள், “ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தலைப்புகளைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகரித்திருக்கின்றன” எனத் தெரிவித்திருக்கிறது.

ஆப்ரேஷன் சிந்தூர் நடந்த அடுத்த நாள்…

இது தொடர்பாகப் பேசிய இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் நிர்வாகி சுரேஷ் அமீன், “ஆப்ரேஷன் சிந்தூர் நிகழ்ந்த அடுத்த நாள், புதன்கிழமை பிற்பகல் 3 மணி முதல் தயாரிப்பாளர்களிடமிருந்து தற்போது நடந்துவரும் மோதல் தொடர்பான தலைப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரத் தொடங்கிவிட்டது.

குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் தலைப்பைப் பெறத் தயாரிப்பாளர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் நிரம்பி வழிகின்றன.

மேலும் விண்ணப்பங்களில் பெரும்பாலானவை பாலிவுட்டின் பெரிய தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து வந்திருக்கிறது. எனவே, IFTPC-யின் அதிகாரிகள், இனி இது தொடர்பான தலைப்பு விண்ணப்பங்களை அனுப்புவதைத் தவிர்க்குமாறு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வாய்மொழியாகத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

 IMPPA
IMPPA

IMPPA சொல்வது என்ன?

இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை (IMPPA) பொருத்தவரை இரண்டு நாட்களில் 20-25 தலைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  

Bar and Bench-ன் அறிக்கையின்படி, பொழுதுபோக்கு, கல்வி, கலாசாரம், ஊடக சேவைகளை உள்ளடக்கிய சட்டப் பிரிவு 41-ன் கீழ் பிரத்தியேக உரிமைகளைக் கோரி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் முதலில் ஆபரேஷன் சிந்தூருக்கான வர்த்தக முத்திரை விண்ணப்பத்தைத் தாக்கல் செய்திருக்கிறது.

தற்போது நடந்து வரும் மோதல் சூழலை மையமாக வைத்து ஜான் ஆபிரகாமின் தயாரிப்பு நிறுவனம், ஆதித்யா தாரின் தயாரிப்பு நிறுவனம்,

மகாவீர் ஜெயின் நிறுவனம், திரைப்படத் தயாரிப்பாளர் மதுர் பண்டார்கர், ஜீ ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ், ஜேபி பிலிம்ஸ், பாம்பே ஷோ ஸ்டுடியோ, ஆல்மைட்டி மோஷன் பிக்சர் போன்ற பெரும் நிறுவனங்கள் இந்தத் தலைப்பு போட்டியில் உள்ளன.

குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் சிந்தூர் மேக்னம், பஹல்கம்: தி ஹாரிஃபிக் டெரர், தி பஹல்கம் டெரர் மற்றும் சிந்தூர் ஆபரேஷன் போன்ற பெயர்கள் குறிப்பிடத்தக்கவை எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

operation sindoor
Operation Sindoor – ஆபரேஷன் சிந்தூர்

வர்த்தக நிபுணரின் பார்வை:

இந்த விவகாரம் தொடர்பாகத் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கும் வர்த்தக நிபுணர் அதுல் மோகன், “கடந்த சில ஆண்டுகளாக இந்த போக்கு வேகம் பெற்றுள்ளது.

உதாரணமாக உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், ஆர்டிகல் 370, காஷ்மீர் ஃபைல்ஸ் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் இப்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம் நடக்கும் போதெல்லாம், அது தொடர்பாக ஒரு தலைப்பைப் பதிவு செய்யும் போக்கைக் கொண்டுள்ளனர்.

பல விண்ணப்பங்கள் அனுப்பப்படுவதால், தயாரிப்பாளர்கள் தங்கள் செல்வாக்கைக் காட்ட முயல்வார்கள். இது போன்ற தலைப்புகள் மூலம், மக்கள் ஏற்கனவே சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பதால் அதைச் சந்தைப்படுத்துவது எளிதாகிவிடும் எனக் கருதுகின்றனர்.

ஆனால், நல்ல கதை மட்டுமே மக்களிடம் சேரும்” என்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *