Pa.Ranjith: `` 'கபாலி' படத்தை இவ்வளவு மோசமா விமர்சித்த பிறகு நான் ஒரு கமர்ஷியல் படம் கொடுத்திருக்கலாம். ஆனா!" - பா. ரஞ்சித் | "I could have made a commercial film. But!" - Pa. Ranjith

Pa.Ranjith: “ ‘கபாலி’ படத்தை இவ்வளவு மோசமா விமர்சித்த பிறகு நான் ஒரு கமர்ஷியல் படம் கொடுத்திருக்கலாம். ஆனா!” – பா. ரஞ்சித் | “I could have made a commercial film. But!” – Pa. Ranjith


ஆனா, ‘கபாலி’ படத்தை மிக மோசமாக விமர்சித்தாங்க. ‘ஒரு நடிகரை நீ எப்படி இப்படி பேச வைக்கலாம். ரஜினிக்குள்ள நீ எப்படி ஜாதியைக் கொண்டு வரலாம்’னு எழுதினாங்க.

அதை உண்மையாகவே எப்படி கையாளணும்னு எனக்குத் தெரியல. ‘கபாலி’ வெற்றிப் படம், தோல்விப் படம் என்பதல்ல என்னுடைய பிரச்னை. இத்தனை ஆண்டுகள் என்னை இழிவாக விமர்சித்த சினிமா குறித்து ஏன் அவர்கள் கேள்வி எழுப்பல.

என்னுடைய வாழ்க்கையை வணிக ரீதியாக வெற்றிப் படத்தில் நான் கொடுத்தேன். அந்தப் படத்தோட திரையாக்கம் குறைபாடுகளை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.

மற்றபடி சூப்பர் ஸ்டார் நடிச்ச மற்ற எல்லா படங்களும் உங்களுக்கு சூப்பரானு தெரியல. நான் ‘கபாலி’ படத்தை நல்லா இயக்கினேன்னு அவர் நம்பினார். அது மிகப்பெரிய வெற்றிப் படம்னு நம்பி எனக்கு ‘காலா’ படத்தின் வாய்ப்பைக் கொடுத்தார்.

‘கபாலி’ படத்தை இவ்வளவு மோசமா விமர்சித்த பிறகு நான் ஒரு கமர்ஷியல் படம் கொடுத்திருக்கலாம். ஆனா, சூப்பர் ஸ்டாரை வைத்து நிலமற்ற மக்களுக்கு நில உரிமை கோருதல் குறித்தான விஷயத்தைப் பேசினேன்.” என்றார்



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *