அறிமுக இயக்குநர் அன்பு எழுதி இயக்கியுள்ள ‘படைத்தலைவன்’ படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
நாளை (மே 23) ‘படைத்தலைவன்’ படம் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் பட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதனை சண்முக பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “அனைவருக்கும் வணக்கம், படைத்தலைவன் திரைப்படம் மே 23 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக, பட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
புதிய வெளியீட்டு தேதியை விரைவில் உறுதி செய்து, அறிவிக்க உள்ளோம். இந்த இடையூறுக்கு மன்னிக்கவும். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி” என்று பதிவிட்டிருக்கிறார்.