Paranthu Po: 'குழந்தைகள், சூரியகாந்திப் பூ, ராம்!' - 'பறந்து போ' படத்தின் சிறப்பு திரையிடல்! | Actor Shiva| Paranthu Po

Paranthu Po: ‘குழந்தைகள், சூரியகாந்திப் பூ, ராம்!’ – ‘பறந்து போ’ படத்தின் சிறப்பு திரையிடல்! | Actor Shiva| Paranthu Po


ஏராளமான வாசகர்கள் தங்களின் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் நெகிழ்ச்சியான பல கடிதங்களை எழுதியிருந்தனர். இயக்குநர் ராம் தொடர்பாக Vikatan Play-வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பலர் சரியான பதில்களைக் கூறியிருந்தனர்.

வாசகர்கள் எழுதிய கடிதங்கள் பலவற்றை இயக்குநர் ராமும் வாசித்தார். பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளை எழுதியவர்களுக்காக நேற்றைய தினம் ‘பறந்து போ’ படத்தின் சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழந்தைகள் தொடங்கி அனைவரும் திரையரங்கத்தை சிரிப்பொலிகளாலும் கைதட்டல்களாலும் நிரம்பச் செய்தனர்.

Paranthu Po Special Screening

Paranthu Po Special Screening

படம் முடிந்த பிறகு இயக்குநர் ராம் திரைப்படம் தொடர்பாக வாசகர்களுடன் கலந்துரையாடினார். வாசகர்களும் திரைப்படம் தொடர்பாக பல கேள்விகள் எழுப்பினர். அதுபோல, அவர்கள் இயக்குநர் ராமுக்காக கவிதைகளையும், கடிதங்களையும் வாசித்தனர்.

அரங்கிலிருந்த குழந்தைகளுக்கு ‘பறந்து போ’ திரைப்படம் மிகவும் நெருக்கமாகிட, இயக்குநர் ராமுக்கு அவர்களும் சூரியகாந்திப் பூ, ஓவியங்கள் என அழகான பரிசுகளையும் வழங்கினர்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *