இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
நகரத்தில் வீட்டிலேயே அடைபட்டிருக்கும் சிறுவன், ஒருநாள் தந்தையுடன் வெளியில் செல்ல வாய்ப்புகிடைக்கிறது. தந்தை – மகன் இருவரும் பைக்கில் ஒரு ரோட் ட்ரிப் பயணம் செல்லும்போது அவர்களுக்குள் என்னவெல்லாம் நடந்தது. மகன் அன்புவின் சேட்டைகள். அதனுள் இருக்கும் சுதந்திர குணம் என சுதந்திரத்தை விரும்பும் குழந்தை, தனது பெற்றோரையும் சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் செல்லுவதாக இதன் கதைக்களம் அமைந்திருக்கிறது. குழந்தையை வீட்டிலேயே அடைத்து வைத்திருக்கும் பெற்றோருக்கு அழுத்தமாக கருத்தை காமெடியாகச் சொல்லியிருக்கிறது இப்படம்.

ராம் – யுவன் காம்போ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் முதலில் யுவன்தான் படம் முழுக்க இசை அமைக்க வேண்டியிருந்தது. ஆனால், யுவன் அந்த சமயத்தில் வேறு சில பெரிய படங்களில் பரபரப்பாக இருந்ததால், இப்படத்தின் பின்னணி இசையை மட்டும் அமைத்திருக்கிறார். பாடல்களை சந்தோஷ் தயாநிதி அமைத்திருக்கிறார்.