பாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகர் ராஜ் கபூரின் நூற்றாண்டு விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடியும் கலந்துகொள்ள வேண்டும் என ராஜ் கபூரின் குடும்பத்தினர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தனர். அப்போது நடிகை கரீனா கபூரின் கணவர் நடிகர் சைஃப் அலிகானும் உடன் இருந்தனர். பிரதமரை சந்தித்தது குறித்து சைஃப் அலிகான் தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.


அதில், “பிரதமர் மோடியை சந்திப்பதற்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. கரீனா, கரிஷ்மா, ரன்பீருடன் நானும் ஒருவனாக இருந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். பிரதமர் மோடி எனது பெற்றோரைப் பற்றி விசாரித்தார். எங்கள் மகன்கள் தைமூரையும், ஜஹாங்கீரையும் அழைத்து வந்திருக்கலாம் எனவும் கூறினார். கரீனா ஒரு காகிதத்தில் பிரதமர் மோடியின் கையெழுத்து கேட்டார். அவரும் கையெழுத்திட்டார். அவர் மிகவும் கடினமாக உழைத்து நாட்டை வழிநடத்துகிறார் என்று எனக்குத் தோன்றியது. அதனால் அவரிடம் எவ்வளவு நேரம் ஓய்வுக்கு கிடைக்கிறது என்று கேட்டேன். அதற்கு அவர், ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே ஓய்வெடுப்பதாக தெரிவித்தார்” என்றார்.