Priyamani: தேவையில்லாத சம்பள உயர்வைக் கேட்கமாட்டேன்; பிரியாமணி | I will not ask for unnecessary salary hike; Priyamani on gender discrimination in salary for actresses

Priyamani: தேவையில்லாத சம்பள உயர்வைக் கேட்கமாட்டேன்; பிரியாமணி | I will not ask for unnecessary salary hike; Priyamani on gender discrimination in salary for actresses


இந்திய சினிமாவில் சம்பள விவகாரத்தில் பாலின பாகுபாடு எப்போதும் விவாதப்பொருளாக இருக்கிறது.

குறிப்பாக ஒரு படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் இடையேயான சம்பள வித்தியாசம் என்பது மலைக்கும் மடுவுக்குமானது.

ஒப்பீட்டளவில் தென்னிந்திய நடிகைகளைவிட பாலிவுட் நடிகைகள் அதிக சம்பளம் வாங்கினாலும், பாலிவுட் நடிகர்களைவிட அவர்களின் சம்பளம் மிகக் குறைவுதான்.

இந்த விவகாரத்தில் பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், வித்யா பாலன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல நடிகைகள், `ஒரு படத்தில் ஆணும் பெண்ணும் நடிப்பில் சமமான பங்களிப்பைக் கொடுத்தாலும் பாலின அடிப்படையில் ஆணுக்குதான் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது” என வெளிப்படையாகவே பேசியிருக்கின்றனர்.

அந்த வரிசையில், நடிகை பிரியாமணி இதில் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

நடிகை பிரியாமணி

நடிகை பிரியாமணி
https://www.instagram.com/pillumani/?hl=en

சிஎன்என் நியூஸ்-18 ஊடகத்துடனான சிறப்பு நேர்காணலில் சினிமாவில் சம்பள விஷயத்தில் பாலின பாகுபாடு குறித்துப் பேசிய பிரியாமணி, “அது உண்மைதான். ஆனால் அது பரவாயில்லை.

உங்களின் மார்க்கெட் வேல்யூ என்னவோ அதைக் கேளுங்கள். அது உங்களுக்குக் கிடைக்கும்.

எனது சக ஆண் நடிகரை விட எனக்குக் குறைவான சம்பளம் வழங்கப்பட்ட நாள்களும் இருக்கின்றன.

இருந்தாலும் அது என்னைப் பாதித்ததில்லை. என்னுடைய மார்க்கெட் வேல்யூ எனக்குத் தெரியும். இது என்னுடைய கருத்து, நான் அனுபவித்தது.

நான் என்ன நம்புகிறேனோ, தகுதியுடையதாக நினைக்கிறேனோ அதற்கானதை கேட்டுப் பெறுவேன். தேவையில்லாத சம்பள உயர்வை நான் கேட்கமாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.





Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *