Rajiv Gandhi: "ஒரு நடிகருக்கு இந்த வாய்ப்புகள் வருவது ரொம்பவே அரிது!" - பகவதி பெருமாள் பேட்டி! |The Hunt - The Rajiv Gandhi Assassination Case | Bagavathi Perumal

Rajiv Gandhi: “ஒரு நடிகருக்கு இந்த வாய்ப்புகள் வருவது ரொம்பவே அரிது!” – பகவதி பெருமாள் பேட்டி! |The Hunt – The Rajiv Gandhi Assassination Case | Bagavathi Perumal


“ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்தின் விசாரணையில் ஈடுபட்ட டி.எஸ்.பி ரகோத்மனின் கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்திருக்கிறீர்கள். இந்த சீரிஸுக்கு நீங்கள் கமிட்டானதும் இந்த வழக்கு தொடர்பான விஷயங்களை தேடி படித்தீர்களா? விசாரணையில் குழுவில் இருந்தவர்களை சந்தித்தீர்களா?”

“இந்த சீரிஸுக்கு கமிட்டானதும் நீங்க சொல்ற விஷயங்களை நான் பண்ணல. அதற்கான தேவையும் அமையல. சொல்லப்போனால், இந்த சீரிஸுக்குள் நான் வருவதற்கு முன்பே ரகோத்மன் சாருடைய நேர்காணல்களையெல்லாம் நான் யூட்யூபில் பார்த்திருக்கேன். தமிழர்களாகிய நமக்கு விடுதலை புலிகள் பற்றியும், ஈழத்தமிழர்கள் பற்றியும், ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்தைப் பற்றியும் நமக்கு தெரிஞ்சிருக்கும். நானும் புத்தகங்கள், காணொளிகள்னு பார்த்து படிச்சு அந்த சம்பவம் தொடர்பாக நிறைய விஷயங்கள் தெரிஞ்சு வச்சிருந்தேன். நான் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சதுக்குப் பிறகுதான் இந்த வாய்ப்பு எனக்கு வந்தது. இந்த வாய்ப்பு எனக்கு வந்ததும் ரகோத்மன் சாரை மீட் பண்ணனும்னு நினைச்சேன். பிறகுதான் அவர் இறந்த செய்தியை எனக்குச் சொன்னாங்க.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை முடிந்தப் பிறகுதான் இந்த சீரிஸின் பணிகளை நாங்க தொடங்கினோம். இப்படியான ரியல் லைஃப் கதாபாத்திரங்கள்ல நடிக்கும்போது சில விஷயங்கள்ல கவனமாக இருந்தாகணும். ரகோத்மன் சாரோட உடல்மொழி நமக்கு தெரியாது, அவர் எப்படியான விஷயங்களை செய்ய விரும்புவார், எப்படி நடப்பார்னு எந்த விஷயமும் நமக்கு தெரியாது. அவருடைய நேர்காணல்களுக்கு நம்முடைய பார்வைக்கு இருக்கு. ஒரு வேளை அவர் பயங்கர ஜாலியான நபராக இருந்தால், கதாபாத்திரமாக இந்தக் கதைக்கு அது தேவைப்படாது. இயக்குநர் நாகேஷ், இந்த சம்பவம் தொடர்பான ஒரு புத்தகத்தை மையப்படுத்திதான் எடுத்திருக்கார். கீர்த்தி சுரேஷ், ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்துல சாவித்ரி அம்மாவாக நடிச்சிருப்பாங்க. அவங்க சாவித்ரி அம்மாவாக தேர்ந்த நடிப்பை மட்டுமேதான் கொடுத்திருப்பாங்க.”



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *