மலையாளத்தில் நிறைய வித்தியாசமாக கதைக்கருவை எடுத்துக்கொண்டு அதைப் பக்கா கமர்ஷியல் வெற்றியாகவும் மாற்றிக் காட்டுகிற துணிச்சல் இருக்கு. இது எல்லாமே நாம் கத்துக்க வேண்டிய பாடம்” என்று பேட்டிகளில் சொல்லியிருந்தார் சேரன்.
இப்போது பயோபிக்கிற்கான ஸ்கிரிப்ட் வேலை முழுமை பெற்றிருப்பதால், சூசகமாக அறிவித்திருக்கிறார் சேரன். மருத்துவரின் பயோபிக் குறித்த அதிகாரப்பூர்வ தகவல், ராமதாஸின் பிறந்த தினமான ஜூலை 25ம் தேதி வெளியாகிறது” என்கிறார்கள்.
இன்னொரு ஆச்சரிய தகவலாக இந்தப் படம் மூன்று பாகங்களாகக் கொண்டு வரதிட்டமிட்டுளனர். முதல் பாகத்தில் ராமதாஸ் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, மருத்துவம், ஏழை மக்களுக்குச் சேவை செய்யும் விதத்தில், சொந்தமாக க்ளினிக் ஒன்றைத் தொடங்கி, 2 ரூபாய், 3 ரூபாய் என மிகக்குறைந்த கட்டணத்தில் ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்தது போன்றவை வரும்.
மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டிருந்த ராமதாஸ், தான் சார்ந்த வன்னியர் சமுதாயத்தின் பின்தங்கிய நிலையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியதுடன், அவர்களின் ஏழ்மை நிலையை அகற்றி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த சமுதாயமாக மாற்ற வேண்டும் என முடிவு எடுத்தது, கட்சி ஆரம்பித்துத் தேர்தலில் நின்றது முதல் வெற்றி வரை முதல் பாகத்தில் இடம்பெறும் என்றும், அடுத்தடுத்த பாகங்களில் மற்ற சுவாரஸ்யங்கள் இடம்பெறும் என்றும் தகவல்கள் வருகின்றன.
ராமதாஸ் ஆக நடிக்கப் போவது யாரென்பதை சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளனர். சில நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்துள்ளனர். மற்றவர்களுக்கான தேர்வுகள் நடந்து வருவதாகவும் சொல்கிறார்கள். படப்பிடிப்பு செப்டம்பரில் இருக்கலாம் என்றும் தகவல்.