இந்த நிலையில், இந்தி சினிமாவின் மறைந்த பழம்பெரும் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் போன்ற முகங்களைக் கொண்டவர் ராஜ் கபூர். அவரின் பேரனும், சினிமாவில் அவரைப்போலவே பன்முகம் கொண்ட மறைந்த ரிஷி கபூரின் மகனுமான ரன்பீர் கபூர், தான் நெப்போட்டிசம் மூலம் வந்தவன் என்றும், வாழ்க்கை தனக்கு எளிதாகக் கிடைத்ததாகவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
ராஜ் கபூர், குரு தத் ஆகியோர் பற்றிய நிகழ்ச்சியொன்றில் பேசிய ரன்பீர் கபூர், “நான் நெப்போட்டிசம் மூலம் வந்தவன். வாழ்க்கை எனக்கு எளிதாகக் கிடைத்தது. ஆனால், எப்போதும் நான் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது.

ஏனெனில் நான் இதுபோன்ற குடும்பத்திலிருந்து வந்தவன் என்பதையும், எனக்கென்று தனிப்பட்ட பாணியை உருவாக்கவில்லையென்றாலோ, எனக்கென்று ஒரு பெயரை உருவாக்கவில்லையென்றாலோ திரைத்துறையில் நான் வெற்றிபெற முடியாது என்பதையும் நான் உணர்ந்தேன்.
என் குடும்பத்தின் நிறைய வெற்றிகளைத்தான் நீங்கள் கொண்டாடுகிறீர்கள். ஆனால், தோல்விகளும் நிறைய இருக்கின்றன.
வெற்றியிலிருந்து எவ்வளவு கற்றுக்கொள்கிறீர்களோ, அதே அளவு தோல்வியிலிருந்தும் நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள்” என்றார்.
2007-ல் தனது 25 வயதில் `சாவரியா” படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வளர்ந்திருக்கும் ரன்பீர் கபூர், தற்போது இந்தியாவில் அதிக பட்ஜெட் படமாக எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் `ராமாயணா’ படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைத்துறையில் நெப்போட்டிசம் குறித்த உங்களின் பார்வையை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.