Retro: ``உங்களைதான் ஜூம் பண்ணி பார்த்தேன்!'' - சனாவின் ஆடிஷன் வீடியோவுக்கு சூர்யா சொன்ன விஷயம்!

Retro: “உங்களைதான் ஜூம் பண்ணி பார்த்தேன்!'' – சனாவின் ஆடிஷன் வீடியோவுக்கு சூர்யா சொன்ன விஷயம்!


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் `ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாடலான `கண்ணாடி பூவே’ பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடலான `கணிமா’ பாடல் இன்று வெளியாகியிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் படங்களில் இடம்பெறும் திருமண கொண்டாட்டப் பாடல்களின் வரிசையில் இப்பாடலும் இணைந்திருக்கிறது.

Kanima - Retro movie song
Kanima – Retro movie song

இப்பாடலில் சூர்யாவோடு சந்தோஷ் நாராயணனும் இணைந்து நடனமாடியிருக்கிறார். இப்பாடல் இன்று வெளியாவதை ஒட்டி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் இடையே நகைச்சுவையான உரையாடல் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நிகழ்ந்தது.

பாடல் வெளியாவதற்கு முன்பு “இப்பாடலில் நான் நடனமாடுவதற்கான ஆடிஷன் வீடியோ இதோ!” என சந்தோஷ் நாரயாணன் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த கார்த்திக் சுப்புராஜ், “ யோவ், இவ்வளவு நாள் எங்கையா இருந்த! சப்ரைஸ் பண்ணிட்ட” என நகைச்சுவையான பதில் பதிவு ஒன்றைப் போட்டார்.

Kanima - Retro movie song
Kanima – Retro movie song

இதனை தாண்டி சந்தோஷ் நாராயணனின் இந்த நடன பதிவுக்கு நடிகர் சூர்யாவும் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதில் கொடுத்திருக்கிறார். அவர், “கணிமா பாடல் முழுவதும் உங்களைதான் ஜூம் போட்டு பாலோவ் பண்ணினேன் சனா. டான்சராகவும் உங்களைப் பிடித்திருக்கிறது.” எனப் பதிவிட்டிருக்கிறார்.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

WhatsApp Image 2025 03 15 at 11.11.30 Thedalweb Retro: ``உங்களைதான் ஜூம் பண்ணி பார்த்தேன்!'' - சனாவின் ஆடிஷன் வீடியோவுக்கு சூர்யா சொன்ன விஷயம்!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *