இயக்குநர் அறிவழகன் – நடிகர் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள படம் “சப்தம்’. 7ஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம், பிப்ரவரி 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், மார்ச் 1 ஆம் தேதிதான் திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், திரைப்படத்தின் வெளியீட்டில் ஏற்பட்ட தாமதத்திற்கு நடிகர் ஆதி வருத்தம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், ” மார்ச் 1ம் தேதி ‘சப்தம்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. நேற்று திரைப்படம் வெளியாகாமல் போனது மிகப்பெரிய இழப்புதான். நிறைய இடங்களில் ரசிகர்கள் முன்பதிவு செய்து படம் பார்க்க முடியாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.