மூணு நாளைக்கு முன்னாடி ஒரு ரிஹர்சல்ல ஒண்ணா பேசிட்டு இருந்தோம். இப்போ அவர் இல்ல என்பதை நம்பவே முடியல.
அப்பாவ (தேவா) பார்க்கவே முடியல, ரொம்ப ஒடஞ்சிட்டாரு. குடும்பமாவே நாங்க ஒடஞ்சிட்டோம். அப்பாவோட கான்செர்ட்ல ஒரு சிங்கமா வந்து பாடுவாரு.
இதுக்கப்றம் எங்க நாங்க பார்க்கப்போறோம்னு ரொம்ப வருத்தமா இருக்கு. இசையமைப்பாளரா 40 படங்கள் கிட்ட பண்ணிருக்காரு.

அவரோட `ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு அப்பா அம்மா (தவமாய் தவமிருந்து)” சாங் கேக்கும்போதே கண் கலங்கும்.
இப்போகூட டியூட் படத்துல சரத்குமார் சாருக்கு போட்ருந்த `மயிலாப்பூர் மயிலே மயிலே’ பாட்டு அவர் பாடுனதுதான். அவரின் இழப்பு எங்க குடும்பத்துக்கு பெரிய அதிர்ச்சியா இருக்கு” என்று கூறினார்.
சபேஷ் தனது சகோதரர் முரளியுடன் இணைந்து சமுத்திரம், தவமாய் தவமிருந்து, இம்சை அரசன் 23-ம் புலிகேசி, பொக்கிஷம் உள்ளிட்ட 25 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

