Salman Khan: "சல்மான் கானிடம் எச்சரிக்கையாக இருக்கும் படி அனுராக் காஷ்யப் சொன்னார்" - 'தபாங்' பட இயக்குநர் அபினவ் காஷ்யப் பளீச்

Salman Khan: “சல்மான் கானிடம் எச்சரிக்கையாக இருக்கும் படி அனுராக் காஷ்யப் சொன்னார்” – ‘தபாங்’ பட இயக்குநர் அபினவ் காஷ்யப் பளீச்


நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியான தபாங் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இப்படத்தை இயக்குநர் அபினவ் காஷ்யப் இயக்கினார். இவர் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் சகோதரர் ஆவர். தபாங் படத்திற்குப் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்துவிட்டனர்.

இதனால் அபினவ் காஷ்யப் அடிக்கடி சல்மான் கானைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். தற்போது மீண்டும் அபினவ் காய்ஷப் நடிகர் சல்மான் கானைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,”‘சல்மான் கான் ஒரு ரவுடி, அவர் கெட்டவர், தொழில் தர்மத்திற்கு எதிராகச் செயல்படுபவர்.

சல்மான் ஒருபோதும் இதில் நேரடியாக ஈடுபடுவதில்லை. அவருக்கு நடிப்பில் கூட ஆர்வம் இல்லை. கடந்த 25 வருடங்களாக அவர் அதில் ஈடுபடுவதில்லை. அவர் ஒரு பிரபலமாக நபராக இருக்க வேண்டும் என்பதற்காக நடிக்கிறார். அவர் ஒரு குண்டா (குண்டர்). தபாங்கிற்கு முன்பு எனக்கு இது தெரியாது.

Salman Khan | சல்மான் கான்

Salman Khan | சல்மான் கான்

அவர் 50 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கும் ஒரு திரைப்படக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்கள் பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்கள்.

அவர்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள். நீங்கள் அவர்களுடன் உடன்படவில்லை என்றால், அவர்கள் உங்களைப் பின்தொடர்கிறார்கள். சல்மான் கானுடன் பணியாற்றும்போது எச்சரிக்கையுடன் இருக்கும் படி எனது சகோதரர் அனுராக் காஷ்யப் என்னை எச்சரித்தார்.

தேரா நாம் படத்தின் மூலம் அவருக்கும் அதே நிலைதான் ஏற்பட்டது. ‘உன்னால் சல்மானுடன் படம் எடுக்க முடியாது’ என்று கூறினார். நான் ஏன் அவருடன் படம் எடுக்க முடியாது என்பதை அவர் எனக்கு விரிவாகச் சொல்லவில்லை.

அவர் தேரா நாம் படத்தைக் கைவிட்டுவிட்டார். எனது சகோதரர் தேரா நாம் படத்திற்கு கதை எழுதினார். ஆனால் தயாரிப்பார் போனி கபூர் அவரிடம் தவறாக நடந்து கொண்டார். எனது சகோதரனுக்கு நடந்ததுதான் எனக்கும் நடந்தது” என்று தெரிவித்தார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *