Sanjay Dutt: "என்னை லோகேஷ் கனகராஜ் வேஸ்ட் செய்துவிட்டார்; அவர் மீது கோபம்!" - சஞ்சய் தத் கலகல! | Lokesh Kanagaraj | Coolie | Vijay

Sanjay Dutt: “என்னை லோகேஷ் கனகராஜ் வேஸ்ட் செய்துவிட்டார்; அவர் மீது கோபம்!” – சஞ்சய் தத் கலகல! | Lokesh Kanagaraj | Coolie | Vijay


இதில் பேசிய சஞ்சய் தத், “எனக்கு கமல் சார் மீதும், ரஜினி சார் மீதும் மரியாதை உள்ளது. அவர்கள் என்னுடைய சீனியர்கள். அவர்களிடமிருந்து நான் பல விஷயங்களைக் கற்றிருக்கிறேன்.

நான் ரஜினி சாருடன் இந்தி படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்.

நான் பார்த்த மனிதர்களில் மிகவும் பணிவானவர் ரஜினி சார். நான் விஜய்யுடனும் இணைந்து நடித்திருக்கிறேன்.

நான் லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருக்கிறேன். (சிரித்துக்கொண்டே…) அவர் எனக்கு ‘லியோ’ படத்தில் பெரிய அளவிலான கதாபாத்திரத்தைக் கொடுக்கவில்லை.

அவர் என்னை வீணடித்துவிட்டார். எனக்கு அஜித் சாரையும் மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு நெருங்கிய நண்பரும்கூட.

ரஜினி சாரின் பல திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். இப்போது ‘கூலி’ படத்திற்காக நான் காத்திருக்கிறேன்.” என்றார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *