முதல்பாதி கேட்டபோதே படம் பிடித்துவிட்டது. தெறிக்கும் அரசியல் வசனங்கள் எல்லாம் வருகிறது. எனக்கு தெரிந்ததெல்லாம் பணக்காரன் – ஏழை என்ற அரசியல்தான். அதனால் இரண்டாவது பாதி கதை எனக்கு புரியவே இல்லை.
சாதி, மத அரசியலெல்லாம் எனக்குத் அவ்வளவாக தெரியாது என்பதால் படம் முழுவதும் நடித்து முடித்துவிட்டேன். அதன்பிறகு படத்தை என் நண்பர்களிடம் போட்டு காண்பித்து, யாரையாவது மறைவாக தாக்கி படம் எடுத்திருக்கிறாரா? எனக் கேட்டேன்.
என் நண்பர்களோ, மறைவாகவெல்லாம் இல்லை… நேரடியாகவே தாக்கி எடுத்திருத்திருக்கிறார் என்றார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இந்தப் படத்தை எல்லோரும் வெறும் படமாகத்தான் பார்ப்பார்கள். இந்த படத்துக்குப் பிறகு அருண் பிரபுவுடன் இன்னொரு படம் நடிக்கவிருக்கிறேன்.
2026-ல் என் தயாரிப்பு கம்பெனி பப்ளிக் லிமிடெட் கம்பெனியாகவிருக்கிறது. அப்போதுதான் இன்னும் நிறைய இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்க முடியும் என நம்புகிறேன்.
எனக்கு அரசியலெல்லாம் தெரியாது. 2026-ல் யாருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதோ அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். படத்துக்கு உங்களின் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன்” எனப் பேசினார்.

