simbu 49: வெற்றிமாறன் - சிலம்பரசன் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கலா? -உண்மை என்ன?

simbu 49: வெற்றிமாறன் – சிலம்பரசன் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கலா? -உண்மை என்ன?


”படம் குறித்து வெளிவரும் தகவல்கள் உண்மையில்லை. நிஜத்தில் படத்தின் புரோமோ வீடியோவிற்கான ஷூட்டிங் நிறைவடைந்து விட்டன. எதிர்பார்த்ததை விட, படத்திற்கான ஆவலைத் தூண்டும் விதத்தில் புரொமோ ஷூட் இருக்க வேண்டும் என்பதற்காக கிராஃபிக்ஸ் மற்றும் வி.எஃப்.எக்ஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்த புரொமோவை யூடியூப்பில் பதிவேற்றாமல், திரையரங்கிலேயே நேரடியாகக் கொண்டு வரலாம் என எண்ணுகின்றனர். வி.எஃப்.எக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி ‘கூலி’ வெளியீட்டுத் தினத்திற்கு முன்னரே நிறைவு பெற்றால், ‘கூலி’ திரைக்கு வரும் அன்றே புரோமோவையும் கொண்டு வரும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள். அப்படியில்லை என்றால், இம்மாத இறுதிக்குள் ரிலீஸ் ஆகிவிடும் என்கின்றனர்.

இன்னொரு விஷயம், படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளதால், மேக்கிங்கிலும் பிரமாண்டம் காட்ட உள்ளனர். படத்திற்கான பட்ஜெட்டும் பிரமாண்டமாகியிருக்கிறது என்ற பேச்சு இருக்கிறது. அதைப் போல், படப்பிடிப்பு அடுத்த மாதம் செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் தொடங்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.

படப்பூஜையும் ஆரம்பித்த அன்றே, படப்பிடிப்பும் தொடங்கும் என்கின்றனர். இந்த இடைவெளியில் சிம்புவும் பத்து கிலோ எடையைக் குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆக, படம் திட்டமிட்டபடி நடக்கும்.” என்கின்றனர்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *