அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடிப்பில் வெளியான படம் `டூரிஸ்ட் ஃபேமிலி”.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும், வசூலிலும் சாதனைப் படைத்து வருகிறது. இந்தப் படம் நடிகை சிம்ரனுக்கு நிச்சயம் கம்பேக் படம் எனும் அளவும் அவரின் அனுபவ நடிப்பும், ரசிகர்களின் கொண்டாட்டத்தையும் பார்க்க முடிந்தது.
இதற்கிடையில், நடிகை சிம்ரன் ஒரு விழா மேடையில் ஒரு நடிகையை பெயர் குறிப்பிடாமல் ‘டப்பா ரோல்’ என்ற வார்த்தையின் மூலம் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார்.
அந்த வீடியோ வைரலான நிலையில், இது சமுக ஊடகத்தில் பேசுபொருளானது.
இந்த நிலையில், நடிகை சிம்ரன் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கிறார். அதில், “இங்கு எத்தனையோ வெப் சீரிஸ்கள் வருகிறது. அதில் ‘டப்பா கார்டெல்’ நல்ல வெப் சீரிஸ் என்று நினைக்கிறேன். நான் இன்னும் அந்த வெப் சீரிஸை பார்க்கவில்லை.