Simran: "இன்று எங்களை விட உயரமாக நிற்கிறாய்!" - தன்னுடைய மூத்த மகன் குறித்து நடிகை சிம்ரன்! |Simran | Simran Family

Simran: “இன்று எங்களை விட உயரமாக நிற்கிறாய்!” – தன்னுடைய மூத்த மகன் குறித்து நடிகை சிம்ரன்! |Simran | Simran Family


தனக்கு குடும்பம் மிகவும் முக்கியம், அவர்களுக்காக எப்போதுமே தனியாக நேரத்தைக் கொடுப்பேன் என்பதை தன்னுடைய பல பேட்டிகளில் சிம்ரன் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்திய விகடன் பிரஸ் மீட்டிலும் தன்னுடைய கணவர், குழந்தைகள் பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். தற்போது, சிம்ரனின் மூத்த மகனான அதீப் தனது பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார்.

அவருடைய பட்டமளிப்பு விழாவில் நடிகை சிம்ரன் பங்கேற்று, அந்த நிகழ்வு ஏற்படுத்திய மகிழ்ச்சி குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் சிம்ரன், “எங்களின் கைகளில் உன்னுடைய சிறிய கைகள் இருந்தன. இன்று பட்டமளிப்பு உடையில் எங்களை விட உயரமாக நிற்கிறாய்! நீ எங்கள் இதயங்களை பெருமையும் வியப்பும் நிரப்பும் வகையில் வளர்ந்திருக்கிறாய்! வாழ்த்துக்கள் ஓடோ, நீ எங்களை மிகவும் பெருமைப்படுத்தியிருக்கிறாய்!” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *