SK 24: `டான் செட்டிங்கு' - சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி கூட்டணி; தொடங்கிய படப்பிடிப்பு

SK 24: `டான் செட்டிங்கு' – சிவகார்த்திகேயன் – சிபி சக்கரவர்த்தி கூட்டணி; தொடங்கிய படப்பிடிப்பு


அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டார் சிவகார்த்திகேயன். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் ‘SK 23’ படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

இன்று தனது அடுத்த படமான ‘SK24’ ஆரம்பித்துவிட்டார். இதற்கான படப்பூஜை சென்னையில் இன்று எளிமையான முறையில் நடக்கிறது.

poojaa Thedalweb SK 24: `டான் செட்டிங்கு' - சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி கூட்டணி; தொடங்கிய படப்பிடிப்பு
சிவா, சிபி

‘அமரன்’ படத்திற்கு முன்னரே, ‘SK 24’க்கான அடித்தளத்தை ஆரம்பித்துவிட்டனர். கடந்த 2022ல் சிவா நடிப்பில், சிபி சக்கரவர்த்தி இயக்கிய படம் ‘டான்’. தமிழில் ஒரு ஜாலியான படமாக, கல்லூரி காலத்து நினைவுகளைத் தூண்டும் படமாக பேசப்பட்டது. இதன் பிறகு சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் மீண்டு சிவா இணைவதற்கான பேச்சு நிலவியது. அந்த பேச்சு, இப்போது கைகூடியிருக்கிறது. ‘மகாராஜா’, ‘பார்க்கிங்’, ‘ரிவால்வர் ரீட்டா உள்பட பல படங்களை தயாரித்த சுதன் சுந்தரம், ‘எஸ்.கே.24’ படத்தை தயாரிக்கிறார். ‘டான்’ படத்தைத் தொடர்ந்து இதிலும் அனிருத் இணைந்திருக்கிறார்.

671207c88c3d8 Thedalweb SK 24: `டான் செட்டிங்கு' - சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி கூட்டணி; தொடங்கிய படப்பிடிப்பு
ராஷ்மிகா மந்தனா

‘SK 23’ கலகலப்பான ஆக்‌ஷன் படம் என்கிறார்கள். இதில் ரம்யாகிருஷ்ணன், முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். ஹீரோயினான மீனாட்சி சௌத்ரி உள்பட பலரும் பரிசீலனையில் இருந்து வந்தனர். இப்போது ராஷ்மிகா மந்தனா நடிப்பார் என்கின்றனர். சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் இன்று படப்பூஜை எளிமையான முறையில் நடந்திருக்கிறது. குறுகிய காலத் தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தை அடுத்து, சுதா கொங்கராவின் படத்திற்குச் செல்கிறார் சிவா.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *