வேறு ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அதற்கு நான் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். அது என்னைப் பயமுறுத்துகிறது. எனது சுதந்திரத்தை இழந்துவிடுவோமோ என்று அச்சப்படுகிறேன். அதேசமயம், அரசியலில் சேர்ந்தால் டெல்லியில் வீடு, குறிப்பிடத்தக்க பதவி, உயர் பாதுகாப்பு, அரசு முத்திரையுடன் கூடிய லெட்டர்ஹெட் போன்ற ஆடம்பரங்கள் கிடைக்கும் என்று பலரும் என்னிடம் கூறினார்கள்.

அதைக் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இப்போது நான் தயாராக இல்லை. சில வருடங்களுக்குப் பிறகு நான் வேறுமாதிரி உணரலாம். எனக்குள் இன்னும் ஒரு நடிகர், இயக்குநர் இருக்கிறார். அதேசமயம் நான் அரசியலுக்கு எதிரானவன் அல்ல. அரசியல்வாதிகளை நான் மதிக்கிறேன்.” என்று கூறினார்.
சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட், கடந்த 2022-ல் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் மோகா தொகுதியில் போட்டியிட்டு, ஆம் ஆத்மி வேட்பாளர் அமந்தீப் கவுர் அரோராவிடம் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.