அந்த வகையில் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “படத்தை மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
குடும்பம், குடும்பமாக வந்துப் படத்தைப் பார்ப்பது எனக்கு மகிழ்சியாக இருக்கிறது. என்னுடைய அடுத்தப் படம் குடும்பம் சார்ந்தப் படமாகவும் இருக்கும், ஆக்சன் சார்ந்த படமாகவும் இருக்கும்.

இன்றைக்கு எல்லோருக்கும் பிடித்தமான ஒரு சூரியாக இருக்கிறேன். கதைநாயகனாக என்னை வெற்றி அடைய செய்துவிட்டீர்கள்.
நானும் எப்போதும் உங்களில் ஒருவனாக இருக்க ஆசைப்படுகிறேன். அதேபோல உங்களில் ஒரு ஹீரோவாகவும் இருக்க ஆசைப்படுகிறேன்.
வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வரவில்லை. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நடிப்பேன்” என்று கூறியிருக்கிறார்.