சிம்புவின் 49-வது திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியிருக்கிறது. சிம்புவுடன் கயாடு லோகர், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இவர்களை தாண்டி படத்தில் சிம்புவுடன் சந்தானமும் முக்கியக் கேரக்டரில் நடிப்பதற்கு கமிட் செய்யப்பட்டிருக்கிறார்.
கடைசியாக சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தில் இணைந்து நடித்திருந்தார் சந்தானம்.
அதன் பிறகு சந்தானம் நடித்த ‘சக்கப் போடு போடு ராஜா’ படத்திற்கு சிம்பு இசையமைத்திருந்தார்.
நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு இந்தக் கூட்டணி இணைவதால் பெரிய எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
‘சிம்புவுக்கு என்றும் நோ சொல்லமாட்டேன்’ என ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்திற்கான ஆனந்த விகடன் நேர்காணலிலும் சந்தானம் கூறியிருந்தார்.