Sundeep Kishan: ``விஜய் மகன்னு சொல்லாதீங்க,அவர் பேரு ஜேசன் சஞ்சய்"-  சந்தீப் கிஷன்

Sundeep Kishan: “விஜய் மகன்னு சொல்லாதீங்க,அவர் பேரு ஜேசன் சஞ்சய்"- சந்தீப் கிஷன்


மாநகரம், மாயவன், தனுஷுடன் கேப்டன் மில்லர், ராயன் உள்ளிட்ட படங்களில் நடத்தவர் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன். தொடர்ந்து லைகா தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்போது அவரது நடிப்பில் தெலுங்கில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘மசாக்கா’. இப்படத்தில் இவருடன் சேர்ந்து ராவ் ரமேஷ், அன்ஷுல், ரிது வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

mazaka movie review Thedalweb Sundeep Kishan: ``விஜய் மகன்னு சொல்லாதீங்க,அவர் பேரு ஜேசன் சஞ்சய்"- சந்தீப் கிஷன்
மசாக்கா

கடந்த 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் மக்களிடடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் சந்தீப் கிஷன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். “என்னுடைய தெலுங்கு படம் ‘மசாக்கா’ வெளியாகி தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் என்னுடைய படங்கள் வெளியாவதற்கு முன்பு இங்கு வந்து சாமி தரிசனம் செய்வேன். இப்போது இந்தப் படம் வெற்றிகரமாக ஓடுவதால் நன்றி தெரிவிப்பதற்காக வந்திருக்கிறேன்” என்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், ‘விஜய்யின் மகன் படம்’ என்று கேள்வியை ஆரம்பித்தார். அதற்கு உடனடியாக பதிலளித்த சந்தீப், ‘விஜய் மகன் என்று சொல்லாதீர்கள்.

Sundeep Kishan m Thedalweb Sundeep Kishan: ``விஜய் மகன்னு சொல்லாதீங்க,அவர் பேரு ஜேசன் சஞ்சய்"- சந்தீப் கிஷன்
சந்தீப் கிஷன்

அவருக்கு ஜேசன் சஞ்சய் என ஒரு பெயர் இருக்கிறது. படத்தின் ஷூட்டிங் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இது அனைவருக்கும் பிடித்த சூப்பர் படமாக வரும்” என்று கூறியிருக்கிறார். அவரின் இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *