கிரிக்கெட் வீரர் சிவம் தூபே, எடிட்டர் மோகன், இயக்குநர் மோகன் ராஜா, நடிகர் சதீஷ் ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
சிவம் தூபே, ரெய்னா நடிக்கவிருக்கும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு காணொளியை வெளியிட்டார். பிறகு, ரெய்னாவும் வீடியோ கால் மூலம் நிகழ்வில் இணைந்து பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாவது பற்றி சுரேஷ் ரெய்னா பேசுகையில், “தமிழ்நாட்டில்தான் விசில் போடு ஆர்மி இருக்கிறது. இங்கு நான் பல கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருக்கிறேன். மக்களின் அன்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது.
ரசம், சென்னை கடற்கரை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் தமிழில் நடிக்கிறேன். இனிமேல்தான் சின்ன தல ஆட்டம் ஆரம்பமாகிறது.” என்று கூறினார்.