Suriya 46: சூர்யாவுடன் மமிதா பைஜூ, ஜி.வி இசை; அடுத்தாண்டு சம்மர் ரிலீஸ் - பறக்கும் சூர்யா 46 |Mamitha Baiju | GV Prakash

Suriya 46: சூர்யாவுடன் மமிதா பைஜூ, ஜி.வி இசை; அடுத்தாண்டு சம்மர் ரிலீஸ் – பறக்கும் சூர்யா 46 |Mamitha Baiju | GV Prakash


சூர்யா நடிக்கும் 46-வது திரைப்படம் இது. இப்படத்திற்கான பூஜை இன்று காலை ஹைதராபாத்தில் நடைபெற்றிருக்கிறது.

பூஜைக்கு சிறப்பு விருந்தினராக இயக்குநர் திரி விக்ரம் கலந்துகொண்டிருக்கிறார். பூஜையில் படக்குழுவினர் பலரும் பங்கேற்றிருக்கிறார்கள்.

படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜுவும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். ஏற்கெனவே, சூர்யா நடிப்பில் உருவான ‘வணங்கான்’ படத்தின் சில காட்சிகளில் மமிதா பைஜூ நடித்திருந்தார்.

அதன் பிறகு அத்திரைப்படம் கைவிடப்பட்டது. அதை தொடர்ந்து இப்போது வெங்கி அத்லூரி இயக்கத்தில் சூர்யாவுடன் மீண்டும் கமிட்டாகியிருக்கிறார் மமிதா பைஜூ. ‘ப்ரேமலு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜெட் வேகத்தில் பறந்துகொண்டிருக்கிறார் மமிதா.

விஜய்யுடன் ‘ஜனநாயகன்’, பிரதீப் ரங்கநாதனுடன் ‘டியூட்’, விஷ்ணு விஷாலுடன் ‘இரண்டு வானம்’, சூர்யாவுடன் ‘சூர்யா 46’ என அடுத்தடுத்து பலமான லைன்-அப்கள் மமிதாவிடம் இருக்கின்றன.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *