T. Rajendar: டி.ராஜேந்தர்: "மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற எனக்கு, புதுப்பட வாய்ப்பு" - நெகிழும் கிங்காங்

T. Rajendar: டி.ராஜேந்தர்: “மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற எனக்கு, புதுப்பட வாய்ப்பு” – நெகிழும் கிங்காங்


அவ்வகையில் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட டி.ராஜேந்திரனுக்குத் திருமண அழைப்பிதழ் கொடுக்க அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.

அப்போது திருமண அழைப்பிதழைப் பெற்றுக் கொண்ட டி.ராஜேந்திரன், “உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்கள் என் படத்தில் நடித்ததில்லை. நான் படம் ஒண்ணு ஆரம்பிக்கிறேன்.

அதுல சின்ன கதாப்பாத்திரம் ஒண்ணு இருக்கு. அதுல நீங்க நடிக்கணும்” என்று தனது படத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.

இதுகுறித்த காணொலியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் நடிகர் கிங்காங், “மகள் திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற எனக்கு, புதுப்பட வாய்ப்பைக் கொடுத்தார் இயக்குநர் டி.ராஜேந்தர்.

எனது மகள் கீர்த்தனா திருமண பத்திரிக்கையை இயக்குனர் டி.ராஜேந்தர் அவர்களிடம் அளித்தேன். பத்திரிக்கை வாங்கிக் கொண்ட டி.ஆர், தான் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்தார். இரட்டை மகிழ்ச்சி” என்று நன்றி தெரிவித்துப் பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *