Thalaivan Thalaivi: "கொஞ்சம்கூட ஓய்வு கொடுக்காமல் உழவு மாடு ஓட்டுற மாதிரி..." - விஜய் சேதுபதி | Vijay Sethupathi| Pandiraj

Thalaivan Thalaivi: “கொஞ்சம்கூட ஓய்வு கொடுக்காமல் உழவு மாடு ஓட்டுற மாதிரி…” – விஜய் சேதுபதி | Vijay Sethupathi| Pandiraj


விஜய் சேதுபதி பேசும்போது, “இது மாதிரி ஆடியோ லாஞ்ச் வரும்போது பெரும் மகிழ்ச்சியா இருக்கும். அதே மாதிரி, இந்தப் படத்துல பாண்டிராஜ் பண்ணின வேலைனு தெரியல, இன்னைக்கு திருவிழாவுக்கு வந்த மாதிரியான உணர்வைக் கொடுக்குது.

இதே வைப்லதான் நாங்க 70 நாட்கள் படத்தை ஷூட் பண்ணோம். என்னுடைய இயக்குநர் பாண்டிராஜுக்கு நன்றியைச் சொல்லிக்கறேன். இந்தப் படம், நடிச்சோம்னு சொல்றதைத் தாண்டி ஒரு அழகான அனுபவத்தையும் கொடுத்திருக்கு.

Thalaivan Thalaivi - Vijay Sethupathi & Nithya Menen

Thalaivan Thalaivi – Vijay Sethupathi & Nithya Menen

இந்தப் படத்துக்கு அவர் நடிகர்களைத் தேர்ந்தெடுத்த விதமும் அழகா இருந்தது. ஆனா, கொஞ்சம்கூட ஓய்வு கொடுக்காம உழவு மாடு ஓட்டுற மாதிரி எங்களை ஓட வச்சுட்டாரு.

இந்தப் படம் பார்க்கிற அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்னு நம்புறேன். அப்படி ஒரு கொண்டாட்டமான திரைப்படம்தான் இது.

படத்தோட தலைப்பை ஷூட் முடிச்சு டப்பிங் சமயத்துல டிசைன் பண்ணிட்டுதான் சொல்லுவேன்னு பாண்டிராஜ் சார் சொன்னாரு. அவர் டைட்டில் சொன்னபோதே எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிடுச்சு.” என்றார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *