Veera Dheera Sooran: ``கேங்ஸ் ஆஃப் வசைப்பூர் படத்துக்கு அப்புறம் இந்த படத்துக்கு..." - ஜிவி பிரகாஷ் | veera dheera sooran movie audio launch event music director gv prakash speech

Tourist Family: `படத்தைப் பார்த்தேன், என் இதயம்..!' – படக்குழுவைப் பாராட்டிய ஜிவி பிரகாஷ்


அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடித்திருக்கும் படம் `டூரிஸ்ட் ஃபேமிலி’.

`டூரிஸ்ட் ஃபேமிலி'
`டூரிஸ்ட் ஃபேமிலி’

‘குட் நைட்’, ‘லவ்வர்’ படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படம் நேற்று(மே 1)திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைப் பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் படக்குழுவினரைப் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைப் பாராட்டி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில்...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில்…

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைப் பார்த்தேன். என் இதயம் நிறைந்துவிட்டது. நகைச்சுவை மற்றும் உணர்வுகளைக் கச்சிதமாக கையாண்டுள்ள, மிகவும் அழகான திரைப்படம். இதயப்பூர்வமான அனுபத்தை அளித்த படக்குழுவிற்கு நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX





Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *