Vetrimaaran: 'STR-49'ல் இரண்டு கெட்டப்களில் அசத்தும் சிலம்பரசன்; தொடங்கும் படப்பிடிப்பு அப்டேட்

Vetrimaaran: 'STR-49'ல் இரண்டு கெட்டப்களில் அசத்தும் சிலம்பரசன்; தொடங்கும் படப்பிடிப்பு அப்டேட்


கடந்த இரண்டு நாட்களாக வெற்றிமாறன் – தனுஷ் – சிலம்பரசனின் ‘வட சென்னை’ என்.ஓ.சி. விவகாரம்தான் கோடம்பாக்கத்தில் ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த சர்ச்சைகளுக்கு வெற்றிமாறன் முடிவுக்கு வந்துவிட்டவே, மீண்டும் உற்சாகமாகியுள்ளது பட யூனிட். வெற்றிமாறனின் படத்தின் தற்போதைய நிலவரம் குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி..

SEL06003 copy Thedalweb Vetrimaaran: 'STR-49'ல் இரண்டு கெட்டப்களில் அசத்தும் சிலம்பரசன்; தொடங்கும் படப்பிடிப்பு அப்டேட்
சிலம்பரசன்

தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறனின் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கிறார். அந்த படத்தின் புரோமோ ஷூட் ஒன்று விரைவில் வெளியாகவிருக்கிறது. அதற்கான படப்பிடிப்பு ஒன்று சமீபத்தில் சென்னை எழும்பூரில் உள்ள மியூசியம் ஒன்றில் நடந்தது. இரண்டு நாட்கல் நடந்த அதன் படப்பிடிப்பில் சிலம்பரசன், இயக்குநர் நெல்சன் மற்றும் ஏராளமான துணை நடிகர்கள் என பலரும் பங்கேற்றனர். வட சென்னை பின்னணியில் உருவாகும் கதை இது. ஆண்ட்ரியா, சமுத்திரகனி, கிஷோர் என பலரும் நடிக்கின்றனர். படத்தின் நாயகிகள் பரிசீலனையில் உள்ளனர்.

வெற்றிமாறன், சிலம்பரசனிடம இந்தக் கதையைச் சொல்லும்போது, ஆரம்பத்தில் அவருக்கு ஒரு கெட்டப் தான் இருந்ததிருக்கிறது. சிலம்பரசனின் இன்வால்வ்மென்ட் பார்த்து ஆச்சரியமான இயக்குநர் வெற்றி மாறன் அவரை டபுள் கெட்டபுகளில் நடிக்க வைக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். ஸ்கிரிப்டையும் இன்னும் ஸ்பெஷலாக செதுக்கியுள்ளார் வெற்றிமாறன். படத்தில் சிலம்பரசன் இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார் என்றும் அதில் ஒரு தோற்றம் இளவயது சிலம்பரசன் என்கிறார்கள். படத்தின் புரோமோ வீடியோவில் சிலம்பரசனின் இரண்டு லுக்குகளும் வெளிவரலாம் என்ற பேச்சு இருக்கிறது.

015A0730 Thedalweb Vetrimaaran: 'STR-49'ல் இரண்டு கெட்டப்களில் அசத்தும் சிலம்பரசன்; தொடங்கும் படப்பிடிப்பு அப்டேட்
Nelson | நெல்சன்

வெற்றிமாறன் – சிலம்பரசனின் படத்திற்கான சென்னை வளசரவாக்கம் பகுதியில் பிரமாண்டமான வடசென்னை பகுதியை செட் போட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் அங்கே புரோமோ வீடியோவின் அடுத்த ஷெட்யூல் அங்கே படமாக்க உள்ளனர். அதிலும் இயக்குநர் நெல்சன் நடிக்கிறார். சிலம்பரசன் தனது தோற்றத்திற்காக பல கிலோ உடல் எடையை குறைத்துள்ளதாகவும் சொல்கிறார்கள். ஆக, ‘எஸ்.டி.ஆர் 49’ படத்தின் புரோமோ வீடியோ, இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *