vettaiyan movie: ஜப்பான் மொழியில் வெளியாகும் ரஜினிகாந்த் - த.செ.ஞானவேல் கூட்டணியின் வேட்டையன்; முத்து, தர்பார் வசூலை முறியடிக்கும்

vettaiyan movie: ஜப்பான் மொழியில் வெளியாகும் ரஜினிகாந்த் – த.செ.ஞானவேல் கூட்டணியின் வேட்டையன்; முத்து, தர்பார் வசூலை முறியடிக்கும்


பார்வையாளர்களின் பாராட்டு மிகச் சிறப்பாக உள்ளது. இரண்டாவது வாரமும் திரையிடப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் தலைவரின் சக்திவாய்ந்த நடிப்பும் ஸ்டைலும் மட்டுமின்றி, ஞானவேலின் திரைக்கதையையும் ரொம்ப விரும்புகிறோம்.

நாங்கள் வசூல் என்ற எண்களின் அடிப்படையில் மட்டும் தலைவரின் படங்களை மதிப்பிட விரும்பவில்லை. அமெரிக்கா அல்லது மலேசியாவை ஒப்பிடும்போது, ஜப்பானில் தமிழர்கள் மிகக் குறைவு. பார்வையாளர்களில் 90%க்கும் மேல் ஜப்பானியர்களே. அதனால், மற்ற நாடுகளைப் போலப் பெரிய அளவில் வெளியீடு இல்லை.

ஆனால், ஜப்பானியர்களின் ரஜினி சார் மீதான அன்பும் உற்சாகமும் எங்கும் காண முடியாத ஒன்று என்று நாங்கள் நம்புகிறோம். Collection is just a number. ‘ரஜினி சார் படங்களைப் பார்த்து, தமிழ் கலாசாரம், உணவு மற்றும் தமிழ் மக்களை விரும்பி வருகிற ஜப்பானியர்கள் பலர் இருக்கிறார்கள்’ என்று ஜப்பானிய ரசிகர் ஒருவர் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

முத்து படத்தில் ரஜினி

முத்து படத்தில் ரஜினி

இதற்கு முன் ‘முத்து’ படம் 15 கோடி வசூல் ஆகி, பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தில் உள்ளது. அந்தக் காலகட்டத்தில் அது மிகப்பெரிய வசூல். அதனைத் தொடர்ந்து ‘சிவாஜி’, ‘எந்திரன்’ வெளியானாலும் ‘தர்பார்’தான் 230 மில்லியன் யென் வசூலித்திருக்கிறது. நம்மூர் காசில் 14 கோடி அள்ளியது.

இப்போது வெளியாகியிருக்கும் ‘வேட்டையன்’ இன்னும் சில நாட்களில் 30 கோடியை நெருங்கினாலும் ஆச்சரியமில்லை. ஓராண்டுக் காலத்திற்குள் ‘வேட்டையன்’ மீண்டும் பேசு பொருள் ஆகியிருக்கிறது. ஜப்பானிய ரசிகர்கள் ‘இது ‘முத்து’வின் வசூலைத் தாண்டி முதலிடத்தைப் பிடிக்கும்’ என்கிறார்கள்” என்றார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *