என்கிட்ட நன்றியை தவிர வேறு எதுவுமில்ல.” என்றவர், “ `சவதீகா’ என்கிற வார்த்தைக்கு தாய் மொழியில `வெல்கம்’ என அர்த்தம். அதுபோல பாடல்ல வர்ற `கப்புங்கா’ என்ற வார்த்தைக்கு `நன்றி’ என்பதுதான் அர்த்தம். நான் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகள்ல பாடல்கள் பாடிட்டேன். இது மாதிரி மலாய், தாய் மொழிகள்ல பாடணும்னு ஒரு ஆசை இருந்தது. அந்த ஆசை இந்தப் பாடல் மூலமாக நடந்திருக்கு. நான் அடிக்கடி இந்த மொழி பேசுற நாடுகளுக்கு போறதுனால அந்த வார்த்தைகளுடைய அர்த்தங்கள் எனக்குத் தெரியும்.
அந்த வார்த்தை நம்ம தமிழ் பாடல்ல உட்கார்ந்து எல்லோரையும் ஆட வைக்கிறது ரொம்பவே சந்தோஷத்தைக் கொடுக்குது. அனிருத் எப்போதும் ஒரு குழந்தை மாதிரிதான். பெரிய பந்தா அவர்கிட்ட இருக்காது. எப்போதும் `ஆண்டோ, Folk Marley’னு வாஞ்சையோட கூப்பிடுவாரு. இந்தப் பாடலுக்குப் பிறகு நீங்க லிரிகல் வீடியோவுல பார்க்கிற மேக்கிங் வீடியோவுக்கும் போயிருந்தோம். இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கு, என்னுடைய டிவிட்டர் பக்கத்தை கேட்டு என்னை டேக் பண்ணியிருக்காங்க. இதுவே ஒரு பெரிய விஷயம். இது எனக்கு அடையாளத்தைக் கொடுக்கிற மாதிரிதான்!” எனக் கூறி முடித்துக் கொண்டார்.