Vignesh Shivan: ``அரசு சொத்தை நான் விலைக்கு கேட்கல..!'' - எழுந்த சர்ச்சைக்கு விக்னேஷ் சிவன் பதில்

Vignesh Shivan: “அரசு சொத்தை நான் விலைக்கு கேட்கல..!'' – எழுந்த சர்ச்சைக்கு விக்னேஷ் சிவன் பதில்


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் `லவ் இன்ஸுரன்ஸ் கம்பேனி’ திரைப்படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் அவர் புதுச்சேரிக்கு சென்று சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து அரசு சொத்தை விலைக்கு கேட்டதாக ஒரு செய்தி பரவி சர்ச்சையை ஏற்படுத்து வந்தது. இதனை தொடர்ந்து அமைச்சர் லட்சுமி நாரயணன், “திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், அயல் நாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளைப் போல புதுச்சேரியிலும் தொடர்ச்சியாக நடத்துவதற்கு அனுமதி கேட்டுத்தான் வந்தார்.” எனக் கூறியிருந்தார்.

தற்போது இது தொடர்பாக விளக்கமளித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். அவர், “ அரசு சொத்தை நான் வாங்க முயன்றதாக சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதனை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். புதுச்சேரி ஏர்போர்ட்டை பார்வையிட்டு அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்கவே நான் புதுச்சேரிக்குச் சென்றேன். அங்கு மரியாதை நிமித்தமாக முதலமைச்சரையும், சுற்றுலாத்துறை அமைச்சரையும் சந்தித்தேன்.

எதிர்பாராதவிதமாக லோகல் மேனேஜர் ஒருவர் அவருக்காக ஏதோ ஒரு விஷயம் தொடர்பாக விசாரித்துக் கொண்டிருந்தார். தற்போது இந்த தகவல் தவறுதலாக என்னுடன் இணைத்து சொல்லப்பட்டு வருகிறது. சமூக வலைதளப் பக்கங்களில் பகிரப்படும் மீம்கள் நகைச்சுவையாக இருக்கிறது. அது எனக்கு உத்வேகமும் அளிக்கிறது. ஆனால், அவையெல்லாம் தேவையற்றது. அதனால் இந்த தகவலை தெளிவுப்படுத்த விரும்பினேன்!” எனப் பதிவிட்டிருக்கிறார்.

`லவ் இன்ஸுரன்ஸ் கம்பேனி’ படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/TATAStoryepi01

WhatsApp Image 2024 11 18 at 16.55.14 2 Thedalweb Vignesh Shivan: ``அரசு சொத்தை நான் விலைக்கு கேட்கல..!'' - எழுந்த சர்ச்சைக்கு விக்னேஷ் சிவன் பதில்





Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *