Vinveli Nayaga: "எத்தனை மகள்களால் தங்கள் தந்தைக்காக இப்படிப் பாட முடியும்" - நெகிழும் ஷ்ருதி ஹாசன்

Vinveli Nayaga: "எத்தனை மகள்களால் தங்கள் தந்தைக்காக இப்படிப் பாட முடியும்" – நெகிழும் ஷ்ருதி ஹாசன்


கமல் ஹாசன் – மணி ரத்னம் கூட்டணியில் உருவாகி, கடந்த ஜூன் 5-ம் தேதி ‘தக் லைஃப்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாகிய இப்படத்தின் அத்தனை பாடல்களும் பலரின் மனதிலும் நீங்காமல் இடம்பிடித்துவிட்டன.

அதிலும், ‘முத்த மழை’, ‘விண்வெளி நாயகா’, ‘அஞ்சு வண்ணப் பூவே’ ஆகிய பாடல்கள் இன்னும் அதிகப்படியான பிடித்தமானவையாக மாறியிருக்கின்றன என்றே சொல்லலாம்.

Thug Life
Thug Life

இதில் ‘விண்வெளி நாயகா’ பாடலை ஷ்ருதி ஹாசன் பாடியிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இப்பாடலைப் பாடி, தந்தை கமல் ஹாசனை பெருமை கொள்ள வைத்திருந்தார்.

கமல் ஹாசனும் ஷ்ருதி ஹாசன் பாடியது குறித்து அந்த விழாவிலேயே பேசியிருந்தார்.

தற்போது ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இந்தப் பாடல் தொடர்பாகப் பேசியிருக்கிறார் ஷ்ருதி ஹாசன்.

ஷ்ருதி ஹாசன் அங்குp பேசுகையில், “நான் நீண்ட காலமாகப் பாடி வருகிறேன். மக்கள் என் பாடல்களை விரும்பியிருக்கிறார்கள். ஆனால் இப்படியான வரவேற்பை நான் இதுவரை பெற்றதில்லை.

என்னை விரும்பாதவர்கள் கூட என்னைத் தொடர்பு கொண்டு இந்தப் பாடலைப் பற்றிப் பேசினார்கள். எத்தனை மகள்களால் தங்கள் தந்தைக்காக இப்படிப் பாட முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

Shruti Haasan - Vinveli Nayaga
Shruti Haasan – Vinveli Nayaga

எனக்கு இது நெகிழ்ச்சி மிகுந்த தருணம். பல மாதங்களுக்கு முன்பு இந்தப் பாடல் பற்றி என்னிடம் கூறினார்கள்.

மற்றொரு படத்திற்காக ரஹ்மான் சாருடன் பாடிக் கொண்டிருந்தபோது, இதைப் பாட விரும்புகிறீர்களா என்று கேட்டார்.

ஆனால் பாடலின் சுருதி எனக்கு மிகவும் உயரமாக இருந்தது. அது என் வரம்புக்கு அப்பாற்பட்டது.

அதனால் அதைச் செய்யவில்லை. பின்னர் டீசரைப் பார்த்தபோது, ‘நான் இந்தப் பாடலைப் பாடவில்லை’ என நினைத்து வருத்தப்பட்டேன்.

ஆனால், சார் மீண்டும் என்னை அழைத்தார். மேடையில் பாடி, அந்த நாளையும் அந்தத் தருணத்தையும் அனைவருடனும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியடைந்தேன்.

கடைசியாக, ரஹ்மான் சாருடன் ஒரு பாடலை நேரில் பதிவு செய்தேன்.

Shruti Haasan - Vinveli Nayaga
Shruti Haasan – Vinveli Nayaga

இந்த முறை, அவர் சென்னையிலும், நான் மும்பையிலும் இருந்து தொலைதூரத்தில் பதிவு செய்தோம். அவரது இன்ஜினியரும் நானும் இணைந்து பாடலைச் சரியாகப் பதிவு செய்தோம்.

வெளியில் தெரியாத பலரின் கூட்டு முயற்சியால் உருவானது ‘விண்வெளி நாயகா’ பாடல். ரஹ்மான் சாருடன் பணிபுரியும்போது, அவர் என் குடும்பத்தினரைப் போன்றவர் என்ற உணர்வு கிடைக்கிறது.” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *