பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் நிஷாஞ்சி.
இரட்டைச் சகோதரர்களின் வாழ்க்கைத் தேர்வும் அதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றமும் தான் கதைக்களம் என்கிறது படக்குழு.
செப்டம்பர் 19-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் இந்தப் படத்தின் புரோமோஷன் வேலைகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இயக்குநர் அனுராக் காஷ்யப் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பயோபிக் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அனுராக் காஷ்யப், “கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஏற்கெனவே பலருக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும், குழந்தைகளுக்குமான ஹீரோ.
எனக்கு அவரைப் பிடிக்கும். தனிப்பட்ட முறையில் அவரைத் தெரியும். மிகவும் உண்மையான மனிதர். உணர்ச்சிவசப்பட்டவர், நம்பமுடியாத ஆற்றலுக்குறியவர்.