ஆனா, நாங்க ஒரு புது விதமான அனுபவத்தை தந்தாகணும். இந்தப் படத்தோட கதைக் கேட்கும்போது இது `ராட்சசன்’ திரைப்படம் கிடையாது.
அந்தப் படத்தைப் போல ஒரு அனுபவத்தைக் கொடுக்கும்னு தோனுச்சு. இந்தப் படத்துக்காக மும்பைக்குப் போய் ஆமீர் கான் சாருக்கு கதை சொல்றதுக்கு வாய்ப்பு கிடைச்சது. 4 முறை, 40 மணி நேரம் எங்களுக்காக கதைக் கேட்டாரு.
அவர் இந்தப் படத்தின் இந்தி வெர்ஷன்ல வில்லன் கேரக்டர்ல நடிக்கிறதுக்கு அவர் கிட்டதட்ட ஒத்துகிட்டாரு.
ஆனா, நடக்கல. பிறகு, தெலுங்குல பைலிங்குவல் திரைப்படமாக பண்ணலாம்னு ரவி தேஜா சார்கிட்ட கதை சொன்னோம். ஒரு சில காரணங்களால அது நடக்கல.
பிறகு, நம்ம இங்க படம் எடுப்போம்னு முடிவு பண்ணிட்டோம். ஏன்னா, இன்னைக்கு பேன் இந்தியாங்கிற வார்த்தையை ரொம்ப சுலபமா மிஸ்யூஸ் பண்ற வார்த்தையா இருக்குனு நான் நினைக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு படங்களிலும் புது விஷயம் எதாவது ஒண்ணு இருக்கும்.
அதுபோல, இந்தப் படத்துலையும் ஒரு புது விஷயம் இருக்கு. என் பையனோட பெயர் ஆர்யன். அவனுடைய பெயர்ல நல்ல படம் கொடுத்திருக்கேன் என்பதுல ரொம்ப சந்தோஷம்.” என மேடையில் பேசினார்.