What to watch on Theatre: கிங்ஸ்டன், Gentle woman, நிறம் மாறும் உலகில் -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

What to watch on Theatre: கிங்ஸ்டன், Gentle woman, நிறம் மாறும் உலகில் -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?


கிங்ஸ்டன் (தமிழ்)

Kingston1 Gallery 4f09c5e0 d189 11ef aa03 a70a1b6bd6ec Thedalweb What to watch on Theatre: கிங்ஸ்டன், Gentle woman, நிறம் மாறும் உலகில் -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Kingston

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கிங்ஸ்டன்’. இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் புதிதாகத் தொடங்கியிருக்கும் ‘பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்’ இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. அக்‌ஷன், கடல் அட்வென்ச்சர்கள் நிறைந்த இத்திரைப்படம், நாளை மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Gentlewoman (தமிழ்)

gentlewoman Thedalweb What to watch on Theatre: கிங்ஸ்டன், Gentle woman, நிறம் மாறும் உலகில் -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Gentlewoma

ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில் லிஜோமோல் ஜோஷ், லோஸ்லியா, ஹரி கிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘Gentlewoman’. திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண்ணுடன் ஆசை கொண்டு பழகும் கணவன், அதைச் சுற்றி நடக்கும் பிரச்னைகளை மையப்படுத்திய இத்திரைப்படம் நாளை மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

அஸ்திரம் (தமிழ்)

அஸ்திரம் Thedalweb What to watch on Theatre: கிங்ஸ்டன், Gentle woman, நிறம் மாறும் உலகில் -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
அஸ்திரம்

அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் ஷ்யாம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அஸ்திரம்’. ‘நிழல்கள்’ ரவி, நிரஞ்சனி, டி.ரஞ்சித் உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கின்றனர். க்ரைம் திரில்லர் திரைப்படமான இது நாளை மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

நிறம் மாறும் உலகில் (தமிழ்)

clusd25f Thedalweb What to watch on Theatre: கிங்ஸ்டன், Gentle woman, நிறம் மாறும் உலகில் -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
நிறம் மாறும் உலகில்

பிரிட்டோ ஜேபி இயக்கத்தில் துளசி, வடிவுக்கரசி, கனிஷா, தர்ஷிகா, பாரதிராஜா, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், நட்டி, யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நிறம் மாறும் உலகில்’. அகங்காரம், ஆணவம், அடாவடி என சுற்றித் திரியும் ஆண்கள் மத்தியில் அம்மா, மனைவி எனப் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது இதன் கதைக்களம். இத்திரைப்படம் மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

படவா (தமிழ்)

badava et00432800 1738906291 Thedalweb What to watch on Theatre: கிங்ஸ்டன், Gentle woman, நிறம் மாறும் உலகில் -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
படவா

கே.வி.நந்தா இயக்கத்தில் விமல், சூரி, ‘கே.ஜி.எஃப்’ பிரபல வில்லன் ராமசந்திரா, தேவதர்ஷினி, ராம நாரயணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘படவா’. பொறுப்பின்றி ஜாலியாகச் சுற்றித் திரியும் விமல், செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக மாட்டிக் கொண்டவர்களுக்காகக் குரல் கொடுத்து அவர்களைக் காப்பாற்றினாரா என்பதுதான் இதன் கதைக்களம். காமெடி, ஆக்ஷன் நிறைந்த இத்திரைப்படம் நாளை மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

லெக் பீஸ் (தமிழ்)

Thedalweb What to watch on Theatre: கிங்ஸ்டன், Gentle woman, நிறம் மாறும் உலகில் -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
லெக் பீஸ்

ஸ்ரீநாத் இயக்கத்தில் யோகிபாபு, கருணாகரன், ரமேஷ் திலக், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘லெக் பீஸ்’. காமெடி, கலாட்டா நிறைந்த இத்திரைப்படம் நாளை மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

எமகாதகி (தமிழ்)

1hwm900e Thedalweb What to watch on Theatre: கிங்ஸ்டன், Gentle woman, நிறம் மாறும் உலகில் -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
எமகாதகி

பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் ரூபா கொடுவயூர், நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், சுபாஸ் ராமசாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘எமகாதகி’. கடவுள், பிசாசு என ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவாகியிக்கும் இது மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Murmur

murmur et00434897 1740119528 Thedalweb What to watch on Theatre: கிங்ஸ்டன், Gentle woman, நிறம் மாறும் உலகில் -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Murmur

ஹேமத் நாராயணன் இயக்கத்தில் ஹாரர் தொகுப்புகளாக உருவாக்கப்பட்டிருக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படம் இது. காட்டுக்குள் அமானுஷ்ய விஷய்ங்களை அறிய கேமராவுடன் ஆர்வத்துடன் செல்லும் நண்பர்கள், அக்காட்டிற்குள் பயத்தில் சிக்கித் தவிக்கும் இந்த ஹாரர் திரில்லர் நாளை மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Kumbalangi Nights (மலையாளம்)

Kumbalangi Nights Thedalweb What to watch on Theatre: கிங்ஸ்டன், Gentle woman, நிறம் மாறும் உலகில் -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Kumbalangi Nights

மது நாராயணன் இயக்கத்தில் ஷான் நிகம், ஷோபின் ஷாஹிர், பகத் பாசில், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிப்பில் 2019ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மொழி கடந்து கவனம் ஈர்த்தத் திரைப்படம் ‘Kumbalangi Nights’. இத்திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவாகியிருக்கும் நிலையில் கேரளாவிலும், சென்னையில் ஒரு சில தியேட்டர்களில் ரீ-ரிலீஸாகியிருக்கிறது இத்திரைப்படம். ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்திலும் இத்திரைப்படத்தைக் காணலாம்.

Vadakkan (மலையாளம்)

vadakkan Thedalweb What to watch on Theatre: கிங்ஸ்டன், Gentle woman, நிறம் மாறும் உலகில் -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Vadakkan

சஜீத் இயக்கத்தில் ‘ஆடுகளம்’ கிஷோர், ஸ்ருதி, மெர்லின், கலேஷ், மினாக்ஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘Vadakkan’. அமானுஷ்ய ஹாரர் திரில்லர் திரைப்படமான இது நாளை மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Footage (இந்தி)

Footage Thedalweb What to watch on Theatre: கிங்ஸ்டன், Gentle woman, நிறம் மாறும் உலகில் -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Footage

பிரபல இயக்குநர் அனுராக் கஷ்யப் வழங்கும் பினீஷ் சந்திரன் தயாரிப்பில், சைஜு ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘Footage’. மஞ்சு வாரியர், விஷாக், காயத்திரி அஷோக் உள்ளிட்டோர் நடித்துள்ள வித்தியசமான ஹாரர் திரில்லர் திரைப்படமான இது நாளை மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Mickey 17 (ஆங்கிலம்)

robert pattinson on mickey 17 poster Thedalweb What to watch on Theatre: கிங்ஸ்டன், Gentle woman, நிறம் மாறும் உலகில் -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Mickey 17

பாங் ஜூன் ஹோ இயக்கத்தில் ராபர்ட் பட்டிசன், நோமி அக்கியே, மார்க் ருஃபெல்லா, ஸ்டீவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘Mickey 17’. சயின்ஸ், ஃபேண்டஸி திரைப்படமான இது நாளை மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

இதில் இந்த வாரம் நீங்கள் பார்க்கப்போகும் திரைப்படத்தைக் கமென்ட்டில் பதிவிடவும்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *