Yash: "இதற்காகத்தான் ராவணனாக நடிக்கிறேன்" - தங்கல் இயக்குநரின் `ராமாயணா' படத்தில் நடிப்பது பற்றி யஷ்

Yash: "இதற்காகத்தான் ராவணனாக நடிக்கிறேன்" – தங்கல் இயக்குநரின் `ராமாயணா' படத்தில் நடிப்பது பற்றி யஷ்


இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், `கே.ஜி.எஃப் சாப்டர் 1′ என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் கன்னட சினிமா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து பான் இந்தியா ஸ்டாராகப் பிரபலமானவர் யஷ்.

மேலும், அந்தப் படத்தின் இரண்டாம் பாகமான `கே.ஜி.எஃப் சாப்டர் 2′ சுமார் ரூ. 1,200 கோடி வசூல் செய்து, ரூ. 1,000+ கோடியை வசூல் செய்த முதல் கன்னட படம் என்ற சாதனை படைத்தது. அதோடு, உலக அளவில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் கே.ஜி.எஃப் சாப்டர் 2 இருக்கிறது.

3931d91c 8c44 4017 bc5b 37ec46e4651b Thedalweb Yash: "இதற்காகத்தான் ராவணனாக நடிக்கிறேன்" - தங்கல் இயக்குநரின் `ராமாயணா' படத்தில் நடிப்பது பற்றி யஷ்
நடிகர் யஷ்

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து, உலக அளவில் அதிக வசூல் செய்த இந்தியப் படங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் `தங்கல்’ படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி இயக்கத்தில் `ராமாயணா’ திரைப்படத்தில் யஷ் நடித்து வருகிறார். பிரபல இந்து புராணக் கதையான வால்மீகியின் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்தில், யஷ் உடன் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, சன்னி தியோல் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக எடுக்கப்படும் இந்தப் படத்தின், முதல் பாகம் 2026-லும், இரண்டாம் பாகம் 2027-லும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ராமாயணா படத்தில், ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது குறித்து யஷ் சுவாரஸ்யம் பகிர்ந்திருக்கிறார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதுபற்றி உரையாடிய யஷ், “இது மிகவும் ஈர்ப்புக்குரிய கதாபாத்திரம். வேறு எந்த காரணத்திற்காகவும் இதை நான் செய்திருக்க மாட்டேன். ஒருவேளை, ராமாயணத்தில் வேறு எதாவது கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்களா என்று என்னிடம் நீங்கள் கேட்டால், எனக்கு அப்படியெதுவும் இல்லை.

Yash Thedalweb Yash: "இதற்காகத்தான் ராவணனாக நடிக்கிறேன்" - தங்கல் இயக்குநரின் `ராமாயணா' படத்தில் நடிப்பது பற்றி யஷ்
நடிகர் யஷ்

என்னைப் பொறுத்தவரை, ஒரு நடிகராக நடிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமான கதாபாத்திரம் ராவணன். இந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் வெவ்வேறு பக்கங்கள் மற்றும் நுணுக்கங்களை நான் விரும்புகிறேன். மேலும், இந்தக் கதாபாத்திரத்தை வித்தியாசமான முறையில் காண்பிக்க நிறைய ஸ்கோப் இருக்கிறது.” என்று கூறியிருக்கிறார்.

New Project 51 Thedalweb Yash: "இதற்காகத்தான் ராவணனாக நடிக்கிறேன்" - தங்கல் இயக்குநரின் `ராமாயணா' படத்தில் நடிப்பது பற்றி யஷ்
நடிகர் யஷ் – இயக்குநர் கீது மோகன்தாஸ்

யஷ் இந்தப் படம் மட்டுமல்லாது இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்சிக் (Toxic) திரைப்படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2025 02 23 at 11.46.47 Thedalweb Yash: "இதற்காகத்தான் ராவணனாக நடிக்கிறேன்" - தங்கல் இயக்குநரின் `ராமாயணா' படத்தில் நடிப்பது பற்றி யஷ்

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *