Yoga: "கரீனா கபூர் வந்த பிறகுதான் யோகா... என் குழந்தைகளுக்கு ஸ்பைடர் மேன் தெரியாது; ஆனா...” - நமீதா

Yoga: "கரீனா கபூர் வந்த பிறகுதான் யோகா… என் குழந்தைகளுக்கு ஸ்பைடர் மேன் தெரியாது; ஆனா…” – நமீதா


11 ஆவது சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் வேலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் நமீதா கலந்துகொண்டிருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “2007-ல் யோகா ஆரம்பமாகவில்லை. அது 5 ஆயிரம் வருடம் பழமையானது. 2007இல் பாலிவுட் நடிகை கரீனா கபூர் யோகா மூலம் உடலைக் கட்டுப்பாட்டோடு வைத்திருந்தது தெரிந்த பின்தான். இங்கு யோகா டிரண்ட் ஆனது.

நமீதா
நமீதா

ஆனால் இதற்கு முன்பே நம் நாட்டில், நமது கலாசாரத்திலேயே யோகா இருந்திருக்கிறது. நம்முடைய பாரம்பரியத்தை மறந்துவிடக் கூடாது.

நம் குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரிந்தால் நல்லதுதான். ஆனால் அதற்கு முன் கண்டிப்பாகத் தாய்மொழி தெரிந்திருக்க வேண்டும். அதுதான் நம்முடைய பெருமை.

என் குழந்தைகளுக்கு தமிழ், தெலுங்கு, குஜராத்தி தெரியும். ஏனென்றால் இது அவர்கள் தாய்மொழி. என் குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேச மாட்டேன். என் குழந்தைக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் தெரியாது. ஆனால் கண்டிப்பாக ஜெய் அனுமான் தெரியும்.

நமீதா
நமீதா

என் குழந்தைகளுக்கு அனுமான் என்றால் மிகவும் பிடிக்கும். இதை நான் பெருமையாகத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் யோகா செய்தது கிடையாது.

ஏனென்றால் என் பெற்றோருக்கு அது பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தது. தெரிந்திருந்தால் நானும் உடலைக் கட்டுப்பாட்டோடு வைத்திருந்திருப்பேன்” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *