“கனா காணும் காலங்கள்’ தொடரின் மூலம் ஜோவாக தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் நடிகர் யுதன் பாலாஜி.
அந்த சீரியல் இவருக்கு ஏற்படுத்தித் தந்த புகழைத் தொடர்ந்து வெள்ளித்திரைக்கு வந்தார்.
ரோஹன் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ‘பட்டாளம்’ படம் மூலம் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார்.
பிறகு ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘மெய்யழகி’, ‘நகர்வலம்’ போன்ற படங்களில் நடித்தவர் கடைசியாக பாபி சிம்ஹாவுடன் ‘வெள்ளை ராஜா’ சீரிஸில் நடித்திருந்தார். அதிலும் `காதல் சொல்ல வந்தேன்’, `பட்டாளம்’ போன்ற படங்களின் பாடல் ஆல்பம் இன்றும் பலருக்கும் ஃபேவரைட்.