சென்னை: சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் ரூ.89.32 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் நவ.14 அன்று திரையரங்குகளில் வெளியானது. திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் பான் இந்தியா முறையில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் இரைச்சல், அதீத சத்தம் எரிச்சலூட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.58.62 கோடியை வசூலித்தது. இந்த நிலையில் இப்படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.89.32 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. முன்னதாக தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிகபட்சமாக விஜய்யின் ‘தி கோட்’ ரூ.126 கோடியை வசூலித்தது. அதனைத் தொடர்ந்து ரஜினியின் ‘வேட்டையன்’ ரூ.60 கோடியை வசூலித்தது. தற்போது 3வது இடத்தை சூர்யாவின் ‘கங்குவா’ பிடித்துள்ளது. சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ ரூ.42 கோடியை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
Epic response for the EPIC #Kanguva raging across cinemas with a 2 Day gross of 89.32 crores worldwide
Book your tickets here
https://t.co/aG93NEBPMQ #KanguvaRunningSuccessfully @Suriya_offl @thedeol @directorsiva @DishPatani @ThisIsDSP #StudioGreen @gnanavelraja007… pic.twitter.com/2dWb2RzQNI
— Studio Green (@StudioGreen2) November 16, 2024