1306794 Thedalweb மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ செப்.5 - 11 | Weekly Horoscope for  Mesham to Meenam for Sep.5 - 11

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ செப்.5 – 11 | Weekly Horoscope for  Mesham to Meenam for Sep.5 – 11


மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு – தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – லாப ஸ்தானத்தில் சனி (வ) – அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும்.

கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதைக் கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். தொழிலில் ஒரு நல்ல காலகட்டத்தை நீங்கள் உணர முடியும். பண வரவு சிறப்பாக இருக்கும். திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம்.

உத்யோகஸ்தர்களுக்கு மிகச்சிறந்த ஏற்றமும், மாற்றமும் உண்டாகும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். இரவு நீண்ட நேரம் முழிக்க வேண்டியதிருக்கும். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.

தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த இழுபறியான சூழல்மாறும். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும். மதிப்பெண்கள் சீராக கிடைக்கும் | பரிகாரம்: முருகனை வணங்க மனதில் நிம்மதி இருக்கும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் குரு – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் – சுக ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் – பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – தொழில் ஸ்தானத்தில் சனி (வ) – லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் மிகவும் கவனமுடனும், சிரத்தையுடனும் இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயம் பேசுவதாக இருந்தாலும் சரி, செய்வதாக இருந்தாலும் சரி, கவனம் தேவை. மனக்கலக்கம், வீண் பயம் ஏற்படலாம். குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு எந்த விதமான குறைவும் இருக்காது. பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.

உத்யோகஸ்தர்கள் வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். தொழில் நன்றாக இருக்கும். எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். பண வரவு இருக்கும்.

பங்குதாரர்களிடம் யதார்த்த நிலையை கடைபிடிக்கவும். எந்தவொரு விஷயத்திலும் ஆராய்ந்து முடிவெடுக்கவும். பெண்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். புரியாத பாடங்கள் புரியும். ஆசிரியர் உதவியை நாடுவது நல்லது | பரிகாரம்: மஹாலட்சுமியை வணங்க குழப்பங்கள் தீரும்.

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் செவ்வாய் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் – சுக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) – தொழில் ஸ்தானத்தில் ராகு – அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். மனதில் இருந்த வீண் பயம் அகலும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகிக்கொள்வார்கள். சகோதர சகோதரிகள் வகையில் எந்த ஒரு முடிவும் எடுக்கும் முன் ஆலோசனை செய்வது நல்லது.

எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. குடும்பத்தில் நீடித்து வந்த குழப்பங்கள் அகலும். தொழில் சார்ந்த குழப்பங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.

புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. வருமானம் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.

பெண்கள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாக்குவாதங்கள் ஏற்படலாம். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் இருந்த சுணக்க நிலை மாறும். பெற்றோர், ஆசிரியர் சொல்படி நடப்பது நல்லது | பரிகாரம்: விஷ்ணுவை வழிபட மனதில் தெளிவு பிறக்கும்.

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) – பாக்கிய ஸ்தானத்தில் ராகு – லாப ஸ்தானத்தில் குரு – அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் மிகச்சிறப்பாக காரியங்கள் நடக்கும். மனதில் தேக்கி வைத்திருந்த திட்டங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். கவலைகள் நீங்கும். நீண்ட நாட்களாக மனதை உருத்திக் கொண்டிருந்த ஒரு கேள்விக்கு இந்த வாரம் விடை கிடைக்கும். குடும்பத்தில் சிக்கல் நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு தருவார்கள்.

வாழ்க்கைத் துணையுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது.

புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். தொழில் மாற்றம் உண்டாகும். பங்குதாரர் பிரச்சினைகள் நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த பணியிடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பெண்களுக்கு நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். மாணவர்கள் கல்வியில் சாதனை புரிவார்கள். தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுப்பது நல்லது | பரிகாரம்: அம்மனை வணங்க காரிய வெற்றி உண்டு.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை – ராசியில் சூரியன், சந்திரன், புதன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – களத்திர ஸ்தானத்தில் சனி (வ) – அஷ்டம ஸ்தானத்தில் ராகு – தொழில் ஸ்தானத்தில் குரு – லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். சுபநிகழ்ச்சியில் இருந்த தடைகள் அகலும். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதில் இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை அகலும். எந்த ஒரு காரியங்களிலும் இருந்து வந்த சுணக்க நிலை அடியோடு மாறும்.

உற்றார் உறவினர்கள், பெற்றோர்கள் நண்பர்கள் என அனைவரும் உங்களுக்கு ஆதரவுக்கரம் கொடுக்கக்கூடிய அற்புதமான காலமிது. தொழிலில் சிறு சிறு பிரச்சினைகள் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும். அதை சமாளிக்கக்கூடிய திறன் உங்களுக்கு வந்து சேரும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம்.

கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். நம்பிக்கை உகந்தவர்களாக பழகுவார்கள். உத்யோகஸ்தர்களைப் பொறுத்த வரை கொடுத்த வேலையைக் கொடுத்த நேரத்தில் செய்து முடிப்பது உங்களுக்கு பிரச்சினை இல்லாமல் தடுக்கும். நிதானம் தேவை. வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டாகும். பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த வந்த குழப்பங்களை சக மாணவர்கள் அல்லது ஆசிரியர் உதவியுடன் தீர்த்துக் கொள்வீர்கள் | பரிகாரம்: சிவனை வணங்க காரியங்கள் கைகூடும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சுக்கிரன், கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) – களத்திர ஸ்தானத்தில் ராகு – பாக்கிய ஸ்தானத்தில் குரு – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் தடைகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் இருந்து வந்த சிக்கல்கள் மற்றும் தாயார் – தாய் வழி உறவினர்களிடம் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

உங்களின் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரித்து மிளிரும். தொழிலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். வாழ்க்கை முழுவதும் பயன்படக்கூடிய அளவிற்கு ஒரு மாற்றம் இந்த வாரத்தில் ஏற்படலாம். லாபம் சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும்.

உத்யோகஸ்தர்களைப் பொறுத்த வரை இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். மேலிடம் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு. மாணவர்களைப் பொறுத்தவரை புதிய புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு இந்த காலம் பேருதவியாக இருக்கும் | பரிகாரம்: பெருமாளை வணங்க மனக்கவலைகள் அகலும்.

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு – அஷ்டம ஸ்தானத்தில் குரு – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் – லாப ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் – அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவீர்கள். வழக்கு சம்பந்தமாக இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கல் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். நடக்காது என்று நீங்கள் கிடப்பில் போட்ட காரியங்கள் உயிர் பெறும். பணம் சம்பந்தமாக நீடித்து வந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கும்.

குடும்பத்தினர் அனைவரும் உங்களுக்கு ஆதரவுக்கரம் கொடுப்பார்கள். தொழில் பலவிதமான வழிகளில் இருந்தும் உங்களுக்கு வருமானம் வரக்கூடிய ஒரு நல்ல காலகட்டம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.

உத்யோகஸ்தர்களைப் பொறுத்தவரை மேலிடம் உங்களுக்கான பொறுப்புகளை அதிகரிக்கும். நிறைய வேலை செய்ய வேண்டிய ஒரு சூழல் உருவாகும். பணம் மற்றும் புதிய நண்பர்கள் சேர்க்கை கிடைக்கும். பெண்களுக்கு மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும்.

இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும். காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமை வந்து சேரும். மாணவர்களைப் பொறுத்தவரை கல்வியில் இருந்துவந்த தேக்க நிலை மாறும். ஒரே நேரத்தில் பலவிதமான கல்வியை பெறக்கூடிய சூழ்நிலை ஏற்படும் | பரிகாரம்: ஆண்டாளை வணங்க மனம் ஒருநிலைப்படும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை – சுக ஸ்தானத்தில் சனி (வ) – பஞ்சம ஸ்தானத்தில் ராகு – களத்திர ஸ்தானத்தில் குரு – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் – தொழில் ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் – லாப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் மிக நல்ல யோகமான பலன்களைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மருத்துவத்திற்காக நீங்கள் செய்யக்கூடிய செலவுகள் அனைத்தும் குறையும். மெதுவாக சென்று கொண்டிருந்த உங்கள் வாழ்க்கை திடீரென்று வேகம் பெறும். ஆனாலும் பணம் சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கும் போது மிக அதிக கவனம் தேவை.

கடன் கொடுக்கும் போதோ அல்லது கடன் வாங்கும் போதோ உறவுச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். எனவே உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு மட்டும் பணம் கொடுத்து வாங்குவது நன்மையைத் தரும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும்.

நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். உத்யோகஸ்தர்களைப் பொறுத்தவரை பணியிடமாற்றம் பதவி உயர்வு உங்களைத் தேடி வரும். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

பெண்கள் பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். தேவையான வசதி வாய்ப்புகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். மாணவர்களைப் பொறுத்தவரை படிப்பில் ஒரு உச்ச நிலையைத் தொடக்கூடிய அற்புதமான காலம் இது | பரிகாரம்: முருகனை வணங்க வாக்கில் தெளிவு பிறக்கும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) – சுக ஸ்தானத்தில் ராகு – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் – தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், கேது என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் அகலும். தன்னம்பிக்கை மிளிரும். தைரியம் அதிகரிக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியும். கடுமையான உழைப்பு உழைக்க வேண்டி இருக்கும். ஒரே நேரத்தில் பலவிதமான வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ய வேண்டி இருக்கும்.

அதனால் குடும்பத்தில் பிரச்சினை, குடும்பத்தை கவனிக்க முடியாத சூழல் உருவாகும். குழந்தைகளின் கல்வி சம்பந்தமாக எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தொழில் செய்பவர்கள் எதிலும் மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் செயல்படவேண்டும். இல்லையெனில் தேவையில்லாத சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

உத்யோகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கும். எனினும் சிறுசிறு தடங்கல்களும் எதிர்மறை எண்ணங்களும் ஏற்படலாம். நினைத்தபடி பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பெண்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல வேலை கிடைக்கும்.

வேலையினால் ஏற்பட்ட சோர்வும், மனஅழுத்தமும் குறையும். அடுத்தவரிடம் பேசும் போதும் கருத்து தெரிவிக்கும் போதும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. மாணவர்கள் உடன் பழகுபவர்களிடம் மிகவும் கவனமுடன் பழக வேண்டும். உங்களை குழப்பி விடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் | பரிகாரம்: சித்தர்களை வழிபட காரியத் தடங்கல் நீங்கும்.

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு – பஞ்சம ஸ்தானத்தில் குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் – பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் மங்கள காரியங்கள் மிக அருமையாக நடைபெறும். அவை நல்ல படியாக நடப்பதற்கு திட்டங்கள் தீட்டுவதற்கும் இந்த காலம் பேருதவியாக இருக்கும். சுபச்செலவுகள் மிக அதிகமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் நீங்கள் ஒன்று சேருவதற்கும், சுபநிகழ்ச்சிகள் சம்பந்தமான நிகழ்ச்சிகளை திட்டமிடுவதற்கும் இந்த நேரம் உதவி புரியும். மனதடுமாற்றம் உண்டாகலாம். செலவு கூடும். நீண்ட நாட்களாக சந்தாணபாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தில் குழந்தைகள் பிறக்கும். வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பர்.

பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள தகுந்த சூழ்நிலை வந்து சேரும். நல்ல முன்னேற்றம் காணலாம். உத்யோகஸ்தர்களுக்கு நீங்கள் இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு முயற்சி எடுத்து செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். உடல் ஆரோக்கியம் பெறும். மனக்கவலை நீங்கும். மாணாக்கர்களுக்கு மேல்படிப்பு சம்பந்தமாக முடிவெடுப்பதற்க்கு இந்த காலகட்டம் மிக உதவிகரமாக இருக்கும் | பரிகாரம்: முன்னோர்களை வணங்க பணப்பிரச்சினை நீங்கும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சனி (வ) – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு – சுக ஸ்தானத்தில் குரு – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் – அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் குடும்ப பிரச்சினைகள் நீங்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பிரச்சினைகள் இருந்தாலும் அமைதிக்கு குறைவு இருக்காது.

சிலர் வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். பயணம் செய்யும் போது உங்களது உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். உங்களிடம் வேலை செய்பவர்களிடம் கூடுதல் அன்பு செலுத்தவும். கடன் வாங்கியிருந்தால் சரியான முறையில் திருப்பிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யவும். அரசாங்க ரீதியிலான பிரச்சினைகள் வரலாம்.

பெண்களுக்கு எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். எதிலும் கவனமாக செயல்படுங்கள். பணிபுரிபவர்கள் சீரான பலனைக் காண்பார்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம் | பரிகாரம்: சனிபகவானை வணங்க முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை – ராசியில் ராகு – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு – சுக ஸ்தானத்தில் செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் – களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் தெளிவுடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை. தானதர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும்.

குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது.

எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பெண்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும் | பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்க வரவேண்டிய பணம் வந்து சேரும்.

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1306794' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *