இரு வயதிலோ அல்லது இளம் வயதிலோ நமக்கு முடி உதிர்தல் ஏற்பட்டு நம்மை சொட்டை தலையாக ஆக்குகிறது. இதனால் பலரும் மனரீதியாக பெரிதும் பாதிக்க படுகின்றனர். இதற்கு ஒரு சிறந்த நிவாரண பொருள் தான் இந்த கருஞ்சீரகம். இது நம்முடைய பண்டைய காலத்தில் கூந்தல் வளர்வதற்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் நம்மில் பலருக்கு இந்த கருஞ்சீரகத்தின் மகிமை தெரியாது.

மருத்துவம்:

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்னையில் ஒன்று தான் இந்த முடி உதிர்தல். தலை முடி நான்றாக வளர நாம் கடைகளில் விற்க்கும் வேதி பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனை  பயன்படுத்துவதால் தான் நமக்கு முடி இன்னும் வளராமல் போகிறது.அல்லது முடி உதிர்வதை மட்டும் த்தான் தடுக்கும் தவிர முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர்வதில்லை. ஆனால் நாம் நம்முடைய இயற்கை முறை மருத்துவத்தை பயன்படுத்துவதால் நமக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. மேலும் நமக்கு முடி வளர்வதையும் அதிகரிக்கும்.

கருஞ்சீரக எண்ணெய்:

karunjeeragam oil Thedalweb கருஞ்சீரகத்தின்(Fennel flower - Nigella sativa) மருத்துவ பயன்கள்

நம்முடைய பண்டைய காலத்தில் கூந்தல் வளர்வதற்கு பயன்படுத்திய பொருள்களில் கண்டிப்பாக இந்த கருஞ்சீரக எண்ணெய் இருக்கும். இதற்க்கு காரணம் இதில் உள்ள நைஜெல்லோன் மற்றும் தைமோ க்யூனோன் என்ற சத்துக்கள் தான். இது நம்முடைய முடி வளர்வதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள நைஜெல்லோன் நம்முடைய முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர உதவுகிறது. எனவே இந்த கருஞ்சீரக எண்ணையை பயன்படுத்தி நம்முடைய முடி வளர்வதை அதிக படுத்த வேண்டும். மேலும் இது இளநரையை போக்கும் சக்தியும் கொண்டது. எனவே நாம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த கருஞ்சீரக எண்ணையை பயன்படுத்துவது நல்லது.

தயாரிக்கும் முறை:

கருஞ்சீரகத்தின் நன்மை பற்றி தெரிந்தாலும் அதனை எவ்வாறு தயாரிப்பது மற்றும் எவ்வாறு உபயோகிப்பது என்பதை பற்றி பலருக்கும் தெரியாது.கருஞ்சீரக எண்ணையை தயாரிக்க நாம் முதலில் கருஞ்சீரகத்தை கொண்டு தயாரிக்க பட்ட எண்ணெய்யை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கருஞ்சீரக எண்ணையை நேரடியாக பயன்படுத்துவது மிகவும் நல்லது. நமக்கு முழுமையான பலன் கிடைக்கும். ஆனால் இந்த எண்ணெய் நேரடியாக கிடைக்காத நேரத்தில் நாம் தேங்காய் எண்ணெயை எடுத்து அதில் கருஞ்சீரகத்தை போட்டு நன்றாகா கொதிக்க வைக்க வேண்டும். பின் வடிகட்டி ஆரிய பின் நாம் அந்தா எண்ணையை பயன்படுத்த வேண்டும். தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக நாம் நால்லெண்ணையையும் பயன்படுத்தலாம்.

நாம் தயாரித்த கருஞ்சீரக எண்ணையை பல வழிகளில் உபாயகப்படுத்தலாம்.
முறை -1:

கருஞ்சீரக எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயிலை சமஅளவு எடுத்து கொள்ள வேண்டும்.இதனை கலந்து மிதமாக சூடுபடுத்த வேண்டும். பின் ஸ்கால்ப்பில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் நம்முடைய முடி உதிர்தல் பிரச்சனை நீங்கும்.

முறை -2:

இரவில் தூங்கும் முன் இந்த கருஞ்சீரக எண்ணெய் உடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து தலையில் நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின் காலையில் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முளை செய்தால் நம்முடைய பொடுகு பிரச்சனை நீங்கும். மேலு நம்முடைய கூந்தலும் நன்றாக வளரும்.

முறை -3:

கருஞ்சீரக எண்ணெயுடன் சிறிதளவு தேன் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நம்முடைய தலையில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டுமாம் பின் டர்க்கி துணியை கொண்டு நம்முடைய தலையில் கட்ட வேண்டும். 20 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு பொடுகு மாற்று  இளநரை பிரச்சனை நீங்கும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.

சில நன்மைகள்:
  • கருஞ்சீரக எண்ணையை பயன்படுத்துவதால் நமக்கு இளநரை ஏற்படுவதை தடுக்கலாம். மேலும் இளநரை இருப்பவர்கள் இதனை உபயோகித்தால் இளநரை கருமையாக மாறும்.
  • இந்த கருஞ்சீரகத்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் இருப்பதன் காரணமாக நம்முடைய தலை முடி உடைவதை தடுக்கிறது,
  • நம்முடைய தலை முடி வளர காரணமான ஸ்கல்ப்பை இது பாதிப்படையாமல் பார்த்து கொள்ளும். இதனால் நமக்கு முடி வளர்வது அதிகமாகும்.

Related Searches :