66,974.77 டாலர்.. வரலாற்று உச்சத்தை தொட்ட பிட்காயின்.. அடுத்தது என்ன..?!

பிட்காயின்

பிட்காயின் அடுத்தது என்ன ?

அமெரிக்காவின் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEC பிட்காயின் வாயிலான ETF திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அமெரிக்க முதலீட்டாளர்களுக்கான முதல் ETF திட்டத்தை அறிமுகம் செய்து முதலீட்டாளர்களும் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.   இதன் மூலம் கிரிப்டோகரன்சியின் அரசன் எனச் செல்லமாக அழைக்கப்படும் பிட்காயின் விலை 66,974.77 டாலர் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.bitcoin hits all-time high whats next big thing for cryptocurrency

சீனா – அமெரிக்கா

கிரிப்டோகரன்சி மீது சீனா விதித்த அடுத்தடுத்த தடை உத்தரவு மூலம் பிட்காயின் உட்பட அனைத்து நாணயங்களும் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்ட நிலையில் அமெரிக்க அரசின் ஆதரவும், ETF-க்கான ஒப்புதலும் பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு அதிகளவிலான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

பிட்காயின் வரலாற்று உச்சம்

இதன் எதிரொலியாகவே இன்று பிட்காயின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 66,974.77 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது. சொல்லப்போனால் ETF முதலீடுகள் துவங்கிய சில நிமிடத்தில் பிட்காயின் விலை 63,808 டாலரில் இருந்து 66,909 டாலர் வரையில் உயர்ந்தது.

SEC அமைப்பு

இந்த அளவீடு அடுத்த சில மணிநேரத்தில் குறைந்தாலும், பெரிய அளவில் குறையாமல் 61,989.36 டாலரில் தற்போது வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. கிட்டதட்ட அமெரிக்கப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEC-ஏ பிட்காயின் மீதான முதலீட்டுக்கு ஒப்புதல் கொடுத்துள்ள நிலையில் அனைத்து கிரிப்டோகரன்சியும் இன்று உயர்ந்துள்ளது.

பிட்காயின் முதலீடு

மொத்த சந்தை மதிப்பு

Bitcoin இன்றைய உயர்வின் மூலம் பிட்காயின் மொத்த சந்தை மதிப்பு 1.3 டிரில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது. தற்போது கிரிப்டோ சந்தையில் 18.85 மில்லியன் டாலர் மதிப்பிலான பிட்காயின் புழக்கத்தில் உள்ளது.

24 மணிநேர சரிவு

2021ஆம் ஆண்டில் மட்டும் பிட்காயின் மீதான முதலீட்டில் இதன் மொத்த மதிப்பு 123.41 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் பிட்காயின் கடந்த 24 மணிநேரத்தில் உச்ச விலையான 66,974.77 டாலரை அடைந்த பின்பு 1,240.19 டாலர் வரையில் சரிந்துள்ளது.

கிரிப்டோகரன்சி விலை

Include the focus keyword in the slug (permalink) of this post

தற்போதைய நிலவரத்தின் பிட்காயின் – 64,920.40 டாலர் (1.91 சதவீத உயர்வு), எதிரியம் – 4,177.78 டாலர் (8.75 சதவீத உயர்வு), ரிப்பிள் – 1.14 டாலர் (4.01 சதவீத உயர்வு), கார்டானோ – 2.26 டாலர் (7.67 சதவீத உயர்வு), போல்காடாட் – 43.87 டாலர் (6.07 சதவீத உயர்வு), டோஜ்காயின் – 0.253 டாலர் (6.07 சதவீத உயர்வு).

பிட்காயின் அடுத்தது என்ன..?

அமெரிக்கா உட்படப் பல தென் ஆசிய நாடுகளும் கிரிப்டோகரன்சிக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில் பிட்காயின் அடுத்தது தனது இமாலய இலக்கான 1,00,000 டாலர் அளவீட்டை அடைவதைத் தான் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இதன் வாயிலாகவே ETF முதலீட்டுக்குத் திறக்கப்பட்ட உடனேயே பல பெரும் முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்ததால் இதன் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

கூகுள் குரோம் பயனர்களுக்கு எச்சரிக்கை: இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம்.!
கூகுள் குரோம் பயனர்களுக்கு எச்சரிக்கை: இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம்.!

சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, கூகுள் குரோம் பயனாளர்கள் உடனே லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்துகொள்ளுமாறு இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது மத்திய தொலைத்தொடர்புத்துறையின் ஒரு பகுதியான இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் சார்பில் கூகுள் குரோம் பயன்படும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி கூகுள் குரோமில் பல பாதிப்புகள் உள்ளதாகவும், பின்பு குறிப்பிட்ட கம்ப்யூட்டரை இலக்காக கொண்டு ரிமோட் அட்டார்கர்ஸ் தாங்கள் நினைத்ததை செயல்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கணினியில் உள்ள தனிப்பட்ட தகவல்களை அவர்களால் எளிதில் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி எதற்காக..? எப்படி இயங்கும்..?
இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி எதற்காக..? எப்படி இயங்கும்..?

டிஜிட்டல் நிதியியல் சேவைகளை அனைத்து வழிகளிலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் அதேவேளையில் பாதுகாப்பான பரிமாற்றம் மற்றும் நிர்வாகத்தை நாணய சந்தையில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக உலகில் பல நாடுகள் காகித நாணயத்தை டிஜிட்டல் நாணயமாக அறிமுகம் செய்ய முயற்சி செய்து வருகிறது.

உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் டிஜிட்டல் கரன்சியை உருவாக்க திட்டமிட்டு நடந்து வரும் குளிர்காலக் கூட்டத்தில் இதற்கான மசோதா-வை தாக்கல் செய்யப்பட உள்ளது.

சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (CBDC)

இந்திய அரசால் வெளியிடப்படும் டிஜிட்டல் கரன்சியைச் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி என அழைக்கப்படுகிறது. இது ரூபாய் நோட்டு போலவே இந்திய அரசால் அறிமுகம் செய்யப்படும் டிஜிட்டல் பணம். இந்தப் பணத்தைத் தற்போது நாம் பயன்படுத்தும் வகையிலேயே பயன்படுத்தலாம், அதேபோல் முழுக்க முழுக்க அரசு கட்டுப்பாட்டில் இயங்கக் கூடியவை என்பதால் 100 சதவீத பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும்.

இன்டர்நெட் இல்லாத போதும் ஜிமெயில் பயன்படுத்தும் வசதி வருகிறது!
இன்டர்நெட் இல்லாத போதும் ஜிமெயில் பயன்படுத்தும் வசதி வருகிறது!

ஜிமெயில் பயனர்களுக்காக இணையதளத்தில் ஒரு மிக முக்கியமான அம்சம் அளிக்கப்பட உள்ளது. இணையதளத்திற்கான ஜிமெயில், இப்போது ஆப்லைனிலும் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. அதாவது இணையதள இணைப்பு இல்லாத இடத்தில் கூட, ஜிமெயிலின் முக்கியமான அம்சங்களை நீங்கள் பயன்படுத்த முடியும். முன்னதாக, ஒரு தனிப்பட்ட ஜிமெயில் ஆஃப்லைன் கிரோம் அப்ளிகேஷன் மூலம் ஜிமெயில் பயனர்களுக்கு, ஆஃப்லைனில் பணியாற்றும் வசதியை கூகுள் நிறுவனம் அளித்து இருந்தது. ஆனால் தற்போது அளிக்கப்பட உள்ள மேற்கண்ட அம்சத்தின் மூலம் பயனர்களுக்கு எந்தொரு ….

ஜிமெயில் பயனர்களுக்காக இணையதளத்தில் ஒரு மிக முக்கியமான அம்சம் அளிக்கப்பட உள்ளது. இணையதளத்திற்கான ஜிமெயில், இப்போது ஆப்லைனிலும் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. அதாவது இணையதள இணைப்பு இல்லாத இடத்தில் கூட, ஜிமெயிலின் முக்கியமான அம்சங்களை நீங்கள் பயன்படுத்த முடியும்.

முன்னதாக, ஒரு தனிப்பட்ட ஜிமெயில் ஆஃப்லைன் கிரோம் அப்ளிகேஷன் மூலம் ஜிமெயில் பயனர்களுக்கு, ஆஃப்லைனில் பணியாற்றும் வசதியை கூகுள் நிறுவனம் அளித்து இருந்தது. ஆனால் தற்போது அளிக்கப்பட உள்ள மேற்கண்ட அம்சத்தின் மூலம் பயனர்களுக்கு எந்தொரு தனிப்பட்ட அப்ளிகேஷனும் தேவைப்படுவது இல்லை.