பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். முகமது ஃபயாஸ் கான் என்ற என்ற வழக்கறிஞர் ஷாருக் கானுக்கு மிரட்டல் விடுத்து 50 லட்சம் பணம் கேட்டுள்ளார். 59 வயதான இவர் சண்டிகர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபயாஸ் கான் மும்பை காவல்துறையினரிடம் சரணடைய மறுத்ததால் அவரைக் கைது செய்துள்ளனர். ஃபயாஸ் கான் அவரது சொந்த அடையாள அட்டையைக் கொண்டு வாங்கிய சிம் கார்டையே மிரட்டலுக்குப் பயன்படுத்தியுள்ளார்.