கொள்ளு ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம்.

கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு” பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. `ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது’ என்கிறார்கள் மருத்துவர்கள். இது ஓர் ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். நன்கு அரைத்து, சாறு எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தலாம். இதை  ஊறவைத்த நீரில்கூட எண்ணற்ற மருத்துவப் பலன்கள் இருக்கின்றன. 

கொழுப்பு, உடல் எடை குறைக்கும் - கொள்ளு நன்மைகள் 
கொழுப்பு, உடல் எடை குறைக்கும் – கொள்ளு நன்மைகள் 

உடல் எடையை குறைக்கும் கொள்ளு:

சாப்பாட்டில் அடிக்கடி இதைச் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவும். முதல் நாள் இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து, காலையில்  வெறும் வயிற்றில் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறையும்.  உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கொள்ளு;
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. இது, உடல் உறுப்புகளை பலம் பெற வைக்கும். நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். எலும்புக்கும் நரம்புக்கும் வலுசேர்க்கும்.  இதை அரிசியுடன் சேர்த்துக் காய்ச்சி, கஞ்சியாக உட்கொள்ளலாம். இதனால், பசியின்மை நீங்கும்; உடல் வலுவாகும். 

சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை கரைக்க உதவும் கொள்ளு:

கொள்ளு பருப்பு நன்மைகள்: சிறுநீரக பகுதியில் கற்கள் உள்ளவர்கள் கொள்ளுவை சமைத்து சாப்பிட்டுவர சிறுநீரக கற்கள் வெளியேறும். மேலும் உதாரணத்திற்கு கொள்ளுவையும், இந்துப்பையும் சிறிதளவு எடுத்து அதனுடன் 1 லிட்டர் அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து சாப்பிட்டுவர சிறுநீரகங்கள், சிறுநீரகப் பாதை போன்ற உள்ளுறுப்புகளில் சேரக்கூடிய அனைத்து கற்களும் கரைந்துவிடும்.

விந்தணுக்களை அதிகரிக்க உதவும் கொள்ளு:

கொள்ளுவில் அதிகமான பாஸ்பரஸ், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள் உள்ளன. ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மலட்டுத்தன்மையை நீக்க கொள்ளு பயன்படுகிறது.

மலச்சிக்கல் குணமாக உதவும் கொள்ளு:

benefits of kollu in tamil: கொள்ளுவில் அதிகமாக நார்ச்சத்து உள்ளது. தீராத மலச்சிக்கல் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் சிறிதளவு முளைகட்டிய கொள்ளு தானியத்தினை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை முற்றிலும் குணமாகும்.

உடலிலுள்ள கொலஸ்ட்ரால் குறைய:

உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருப்பதினாலும் பல நோய்கள் உண்டாகலாம். உடலில் தேவையில்லாமல் உண்டாகும் கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு ஊறவைத்த கொள்ளுவினை தினமும் இரு வேளையிலும் சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் அதிகளவு கொழுப்பானது குறைந்து உடலை பாதுகாப்பாக வைத்திருக்கும்.

கண்களில் ஏற்படும் நோய்கள் குணமாக:

மெட்ராஸ் ஐ என்று சொல்லக்கூடிய கண் நோய் ஏற்பட்டால் கண்களை திறக்க முடியாமல் மிகவும் அவதிக்கு உள்ளாவார்கள். இதனால் கண்களில் எரிச்சல், நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இதிலிருந்து விடுபடுவதற்கு இரவு படுக்கைக்கு முன்பு சிறிய கிண்ணத்தில் கொள்ளுவை ஊறவைத்து காலை எழுந்ததும் அந்த ஊறவைத்த கொள்ளு நீரினை எடுத்து கண்களை கழுவி வர கண்களில் உள்ள எரிச்சல் நீங்கி கண் நோய்கள் அனைத்தும் குணமாகும்.

சர்க்கரை நோயை தடுக்கும் கொள்ளு:

நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையின் அளவைக் கணக்கிடும் அளவுகோல் பெயரானது`கிளைசெமிக் இண்டெக்ஸ்’ ஆகும். அந்த அளவானது அதிகரிக்கும்போது உடலில் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவானது அதிகரிக்கும். இதனை தவிர்க்க கொள்ளுவை (kollu benefits in tamil) சர்க்கரை நோயாளிகள் அனைவரும் தாராளமாக சாப்பிடலாம்.

மாதவிடாய்ப் பிரச்னைகளைச் சரிசெய்யும்
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில், ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்; மாதவிடாய் பிரச்னைகளை சரிப்படுத்தும். பெண்கள் கொள்ளு நீரை அருந்தலாம்; சூப்பாகவும் சாப்பிடலாம். மாதவிடாய் காலத்தில் மட்டும் தவிர்த்தல் நல்லது.